Subscribe Us

header ads

362 மீ. நீளம் கொண்டஉலகின் மிகப்பெரிய பயணிகள் கப்பல் ...(PHOTOS)



உலகின் மிகப்பெரிய சொகுசு கப்பல் பிரான்சில் தயாரிக்கப்பட்டு சமீபத்தில் தண்ணீரில் இறக்கப்பட்டுள்ளது. இந்த கப்பல் 362 மீ (1187 அடி) நீளத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இது ஈபிள் டவரை விட 50 மீட்டர் அதிகம். இந்த நீளமான கப்பலின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. 

இந்த கப்பலுக்கு ‘‘ஹார்மோனி ஆப் தி சீஸ்’’ எனப்பெயரிடப்பட்டுள்ளது. கடந்த 2013-ம் ஆண்டில் இருந்து செயின்ட்-நசைர் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்டு வந்தது. இறுதிக்கட்ட பணிகள் முடிந்து அடுத்த ஆண்டு தனது முதல் பயணத்தை தொடங்கும்போது இதன் எடை இரண்டு லட்சத்து 27 ஆயிரம் டன் ஆக இருக்கும்.

இதற்கு முன் தயாரிக்கப்பட்ட ‘‘அல்லுரே ஆப் தி சீஸ், ஒயாசிஸ் ஆப் தி சீஸ்’’ ஆகியவை 65 மீட்டர் அகலமும் இரண்டு லட்சத்து 25 ஆயிரம் டன் எடையும் கொண்டதாகும்.

ஹார்மோனி கப்பல் கட்டும் பணியில் 2500 ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இறுதிக்கட்ட பணிகளுக்கு 90 ஆயிரம் சதுர மீட்டர் (968700 சதுர அடி) கொண்ட கார்பெட்டும், ஐந்து லட்சம் லிட்டர் பெயிண்டும் தேவைப்படுகிறது. 

அடுத்த ஆண்டு பிப்ரவரி மத்தியில் இந்த கப்பலின் சோதனை ஓட்டம் நடத்தப்படுகிறது. அதன்பிறகு மே மாதம் சவுதாம்ப்டனில் இருந்து ஸ்பெயினின் பார்சிலோனாவுக்கு முதல் பயணத்தை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

மிக பிரமாண்டமாக உருவாகி வரும் இந்த கப்பலில் 6360 பயணிகளும், 2100 ஊழியர்களும் பயணம் செய்யலாம்.


Post a Comment

0 Comments