இங்கிலாந்தில் உள்ள மேற்கு யார்க்ஷயர் நகரை சேர்ந்தவர் ஆண்ட்ரு மில்பர்ன் இவர்அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
சில நாட்களுக்கு முன் இரவு பணிக்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். இரவு நேரத்தில் தனது காதலியுடன் எஸ்.எம்.எஸ் மூலம் உரையாடிக் கொண்டிருந்தபோது, தான் மருத்துவமனையில் பணியில் இருக்கிறேன் என்று ஆண்ட்ரூ கூறியதை அவரது காதலி நம்பவில்லை.
இதனால் தந்து காதலிக்கு அதி நிரூபிக்கும் வகையில், குழந்தைகள் பகுதியான க்லெரன்டன் விங் என்ற நடைப்பாதையை தனது மொபைலில் படம் பிடித்துள்ளார்.
பின்னர், அந்த புகைப்படத்தை தனது காதலிக்கு அனுப்ப முயற்சித்த போது சட்டென அவரது பார்வைக்கு புகைப்படத்தில் இருந்த அந்த வெள்ளை நிற புகைப்போன்ற உருவம் தெரிந்ததும் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
அந்த புகைப்படத்தை ஜூம் செய்து நன்கு கூர்ந்து பார்த்தபோது அங்குள்ள அறை ஒன்றிற்குள் வெள்ளை நிற ஆடையுடன் குழந்தை ஒன்று நடந்து போவதை பார்த்து அது பேய் தான் என்ற முடிவிற்கு வந்துள்ளார்.
மருத்துவமனையில் பரபரப்பை ஏற்படுத்திய அந்த புகைப்படத்தை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்தபோது ஆயிரக்கணக்கான நபர்கள் அதனை பகிர்ந்தனர்.
அசாதரண நிகழ்வுகள் குறித்து ஆராய்ச்சி செய்யும் நிபுணர்களும் அது உண்மையிலேயே பேய் தானா என்று ஆராய்ந்து வருகின்றனர்.
பேஸ்புக்கில் நபர்கள் சிலர் கோஸ்ட் கேப்சுர் என்ற அப்ளிகேஷன் மூலம் அந்த நபர் பேய் இருப்பது போல புகைப்படத்தை மாற்றி தயார் செய்துள்ளார் என்றும், அது நிச்சயமாக பேயாக இருக்க முடியாது என மறுத்து வருகின்றனர்
ஆனால் இந்த படம் இணையதளங்களில் வைராலக பரவி வருகிறது


0 Comments