findmyfare.com இணையத்தளத்தின் அமைப்பாளர்களால், அவர்களின் இன்னுமொரு நவீன இலத்திரனியல் வணிக இணையத்தளம் retailgenius.com அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.
இப்புதிய இணையத்தளமானது இலங்கையில் முதலாவதும் பாரிய மதிப்புமிக்க, மற்றும் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பிடித்த ஆடம்பர, வர்த்தகநாம பொருட்களை ஒரே இடத்தில் பெற்றுக்கொள்ளக்கூடிய இணையவழி சந்தையாகும்.
retailgenius.com இலங்கையின் இலத்திரனியல் துறையின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கும் என்பதோடு, உயர்தர வர்த்தக நாம பொருட்களை இணையத்தில் வாங்கும் கொள்வனவாளர்களை முதன்மை விற்பனையாளர்களுடன் இணைக்கிறது.
retailgenius.com சிறந்த வர்த்தகநாம பொருட்களை தள்ளுபடி விலையிலும், மிகைப்படுத்தப்பட்ட வசதியினையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.
retailgenius.com இலங்கையின் முதன்மையான ஆடை, இலத்திரனியல் சாதனங்கள், கைக்கடிகாரங்கள் மற்றும் நகைகள் உட்பட முன்னணி ஆடம்பர சில்லறை விற்பனையாளர்களுடன் கூட்டு பங்காண்மையை மேற்கொண்டுள்ளது. மேலும் பல முன்னணி வர்த்தக நாமங்கள் எதிர்காலத்தில் இணையத்தளத்தில் சேர்க்கப்படுவதோடு, retailgenius.com சிறந்த ஆடம்பர பொருட்களை ஒரே இடத்தில் பெற்றுக்கொள்ளக்கூடிய இணையத்தளமாக உருவாக்கப்படும்.
இந்த இணையத்தளமானது நாகரீக வடிவமைப்பாளர்களின் வேலைப்பாடுகளை காட்சிப்படுத்தவும் மற்றும் விற்பனைக்கும் மிகச்சிறந்த அடித்தளத்தினை வழங்கும் என்பது முக்கிய அம்சமாகும்.
வியாபார வளர்ச்சிக்கு இணைய ரீதியிலான அணுகுமுறையானது அவசியம் என்பதை முன்னிட்டு retailgenius.com பாரம்பரிய இயந்திர சில்லறை விற்பனை நிலையங்களின் தயாரிப்புகளை இணையத்தில் விற்பனை செய்வதன் மூலம் கூடுதல் வருவாயை ஈட்ட உதவியாக இருக்கும்.
வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை தேர்ந்தெடுத்து கொள்வனவு நிரலில் பதிவிடுவதன் மூலம் அப்பொருட்கள் அவர்களது வீடுவரை விநியோகிக்கப்படும். வாடிக்கையாளர்கள் தேர்வுசெய்த பொருட்கள், அவர்களுக்கு பொருந்தாத பட்சத்தில் அவற்றை மீளளிக்க முயற்சிக்கலாம்.
அத்துடன் பல்வேறு கட்டண முறைகளாக விநியோகத்தின் போதான பணக்கையளிப்பு, மற்றும் இணைய மூலமான கடன் அல்லது பற்று அட்டை வழியாக செலுத்தும் வசதிகளை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
retailgenius.com இணையத்தளமானது பாதுகாப்பான இணைய உள்நுழைவு செயற்பாடு, மற்றும் பல்வேறுவகையான தயாரிப்புகளை விலைப்பட்டியலோடு கொண்டிருக்கும் என்பது மேலும் குறிப்பிடத்தக்க அம்சங்களாகும்.
கொள்வனவாளர்கள் தங்களுடைய இணையவழி பொருட்கொள்வனவு பட்டியலை இலகுவாக அணுகமுடியும். அத்தோடு முற்றிலும் பாதுகாப்பான கட்டணமுறைகளுக்கான உத்தரவாதத்தையும் வழங்குகிறது.
findmyfare.com 100,000 வரையான வாடிக்கையாளர்களை கொண்டுள்ளதுடன், இவ் வாடிக்கையாளர்கள் retailgenius.com இல் ஆடம்பர பொருட்களை சிறந்த தள்ளுபடி விலையில் பெற்றுக்கொள்ள முடியும், இச்செயற்பாடு இத்தளத்தினை மேலும் சிறப்பாக கொண்டுசெல்ல உதவியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
retailgenius.com தொடக்க விழாவில், retailgenius.com இன் பணிப்பாளர் அபிஷேக் சிதம்பலம் கருத்து தெரிவித்த போது “இணையவழி வாடிக்கையாளர்களுக்கான தேவைகளை கருத்திற் கொண்டு retailgenius.com உருவாக்கப்பட்டு, வாடிக்கையாளர்களுக்கு விரைவாக மற்றும் இலகுவாக அவர்கள் விருப்பத்தெரிவுகளை அணுகக்கூடிய வசதிகளை வழங்குகிறது.
இணையவழி கொள்வனவானது, வாடிக்கையாளர்களின் மதிப்புமிக்க நேரம் மற்றும் பணத்தை சேமிக்க உதவுவதுடன், ஒரு சில நிமிடங்களில் மிகவும் வசதியாக உங்களுக்கு தேவையானவற்றை தேடி, விலைகளை ஒப்பிட்டு உங்களுக்கான தெரிவுகளை கொள்வனவு நிரலில் பதிவிடமுடியும்.
findmyfare.com வெற்றியடைந்ததை தொடர்ந்து ஏனைய உயர்திறன் துறைகளுக்கான எமது இலத்திரனியில் வணிக மாதிரியை விரிவுபடுத்த வேண்டும் என உணர்ந்தோம். இலங்கையில் சில்லறை விற்பனைத்துறையானது உண்மையில் சிறப்பாக வளர்ச்சியடைந்துவருவதுடன், மற்றும் நாட்டில் பல உயர்தர வர்த்தக நாமங்கள் இருக்கின்றன, இதன் பொருட்டு சில்லறை விற்பனையாளர்கள், வாடிக்கையாளர் விருப்பங்களுக்கு இணையவழி சில்லறை விற்பனை அடித்தளமானது பெரும் உதவியாக அமையும் என நினைத்தோம்.
முதன்மையான இணையவழி சந்தை retailgenius.com ஆனது உள்ளூர் இலத்திரனியல் வணிகத்துறையில் முக்கிய பங்காற்றி, சில்லறை வர்த்தக துறைக்கும் பாரிய உதவியளிக்கும்" என குறிப்பிட்டார்.
retailgenius.com இன் இலக்குகள் மற்றும் நோக்கங்கள் பற்றி கருத்துத்தெரிவித்த retailgenius.com இன் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பணிப்பாளர் துஷான் சண்முகராஜா “இலங்கையிலும் மற்றும் பிராந்திய ரீதியிலும் முன்னணி சில்லறை விற்பனை இணையத்தளமாக இருப்பதே எமது பிரதான நோக்கமாகும். அத்துடன் சில்லறை விற்பனையாளர்களுக்கு அவர்களது தயாரிப்புக்களை ஒழுங்குபடுத்த மற்றும் விற்பனைக் கட்டளைகளுக்கான ஒருங்கிணைப்பு, விற்பனை கணக்குகளை கையாளத்தேவையான அனைத்துவிதமான பொறிமுறைகளையும் வழங்குவதோடு, அவர்களின் விற்பனைத்திறன் தொடர்பான புள்ளிவிபரவியலும் வழங்கப்படும்.
அத்துடன் இலங்கையிலுள்ள கொள்வனவாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கான உரிமைகளை சரியான முறையில் வழங்கி இணையவழி வணிகத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்த விரும்புகின்றோம்.
retailgenius.com இணையத்தளமானது, findmyfare.com போன்று இணைய வணிகத்தில் பலவிதமான அனுகூலங்களோடு பிரகாசிக்கும் என நம்புகின்றோம். அத்துடன் வாடிக்கையாளர் மற்றும் விற்பனையாளர்களுக்கான தீர்வுகளை ஒரே இடத்தில் வழங்கும் retailgenius.com, நவீன தொழினுட்ப வசதியுடன் ஆசியாவின் மிகப்பெரியதும் அதிக ஈடுபாட்டுடனும் செயற்படும் இணைய விற்பனைகூடமாக உருவாக்கப்படும்" என தெரிவித்தார்.
retailgenius.com இணையத்தளமானது வாடிக்கையாளர்களுக்கு பேஸ்புக், கூகிள் விளம்பரங்கள், செய்திகள், வானொலி மற்றும் தொலைக்காட்சி விளம்பரங்களின் மூலம் பல்வேறுப்பட்ட விற்பனை வர்த்தக நாமங்களை ஊக்குவிக்கும் என்பது இங்கு முக்கிய விடயமாகும்.
retailgenius.com இணையத்தளத்திலுள்ள வர்த்தக நாமங்களை ஊக்குவிப்பதற்காக பல மில்லியன் ரூபாய்களை முதலீடு செய்வதோடு, அனைத்து வாடிக்கையாளர்களின் கேள்விகளுக்கும் நியமிக்கப்பட்ட BPO கோல்சென்டர் மூலம் பதிலளிக்கப்படும்.
இலங்கையின் முன்னணி விநியோக நிறுவனங்களும் மேலதிக ஆதரவினை வழங்குவதற்காக retailgenius.com உடன் இணைந்துள்ளன.
உயர் தொழினுட்ப முன்னேற்றத்தின் வெளிப்பாடுகளான ஐபாட்கள், கின்டெல், retailgenius.com போன்ற இலத்திரனியல் வணிகத்தளங்கள் என்பன சில்லறை விற்பனை நிலையங்களின் பாரம்பரிய வணிக விதிமுறைகளுக்கு சவாலாக இருப்பதுடன், புதியதொரு அடித்தளத்தை வழிசமைத்து வருவாய் வளர்ச்சிக்கு உதவியாக அமைகிறது.


0 Comments