Subscribe Us

header ads

அதிர்ச்சியில் CSN : கிரிக்கெட் உரிமம் ரூபவாஹினிக்கு


நடப்பாண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரைக்கும், இலங்கை கிரிக்கெட் அணி பங்கேற்கும் சர்வதேச போட்டிகளை ஒளிபரப்புவதற்கான உரிமத்தை தேசிய ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்திற்கு வழங்குவதற்கு கிரிக்கெட் இடைக்கால நிர்வாக சபை தீர்மானித்துள்ளதாக கிரிக்கெட் நிறுவனத்தின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும், கிரிக்கெட் நிர்வாக சபையினால் ஒளிபரப்பு உரிமத்திற்காக கோரப்பட்ட விலை மனுக் கோரலில் CSN நிறவனமே அதிக விலையைக் குறிப்பிட்டுள்ளது. அந்த நிறுவனம் குறித்த காலப்பகுதிக்கு 175.5 மில்லியன் ரூபாவை மனுவில் குறிப்பிட்டுள்ளது.
தேசிய ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் 110 மில்லியன் ரூபாவையே குறிப்பிட்டுள்ளது.
இதற்கமைய ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் விலைக்கு மேலதிக 65.5 மில்லியன் ரூபாவை CSN நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
MTV நிறுவனம் 51.5 மில்லியன் ரூபாவையே குறிப்பிட்டிருந்தது.
கடந்த பெப்ரவரி மாதம் 01ஆம் திகதி கோரப்பட்ட இந்த விலை மனுக் கோரல் கடந்த மார்ச் 09ஆம் திகதி பரிசீலிக்கப்பட்டது.
எனினும், 2010ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரையில் கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்பியதற்காக CSN நிறுவனம் 125 மில்லியன் ரூபாவை நிலுவையாக  செலுத்த வேண்டியிருந்து,  இந்தத் தொகையை தற்போது CSN நிறுவனம் செலுத்தியுள்ளது. 
இந்நிலையிலேயே, 2015 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரையிலான ஒளிபரப்பு உரிமத்தை தேசிய ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்திற்கு வழங்குவதற்கான சில முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

Post a Comment

0 Comments