ஜமியதுல் உலமா COMMERCIAL வங்கியின் காசோலையை நேபாளில் பதிக்கப்பட்ட மக்களுக்காக வழங்கியதை, COMMERCIAL வங்கியில் கணக்கு வைத்திருப்பது ஹராமா ஹலாலா என்ற விவாதம் புரியும் வேண்டாதவர்களே…
ஒன்றை அறிந்து கொள்ளுங்கள் இலங்கை முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழும் நாடு இது.
இங்கு பெரும்பான்மையினரை அனுசரித்து வாழ நாம் பழகிக்கொள்ள வேண்டும்.
இலங்கையில் வங்கியாக தொழிற்பட வேண்டுமாயிருந்தால் மத்திய வங்கியில் 20 மில்லியன் ரூபாய்களை நிலுவையாக பேன வேண்டும்.. தாம் நிலுவையாக பேணும் தொகைக்கு மதிய வங்கி வட்டி தொகையை குறிப்பிட்ட வங்கிக்கு செலுத்தும்,
அவ் வங்கி தாம் வட்டி பணத்தை பெற விரும்ப விட்டால் மத்திய வங்கிக்கு எழுத்து மூலம் அறிவிக்க முடியும்.
அதே போன்று நடைமுறை கணக்கு மற்றும் சேமிப்பு கணக்கை பேணுவோர் தாம் வட்டி தொகையை பெற விரும்பாவிட்டால் எழுத்து மூலம் அறிவிக்க முடியும்.
இலங்கையில் இஸ்லாமிய வங்கியாக தொழிற்படும் அமானா வங்கி காசோலை கொடுக்கல் வாங்கலை எந்தளவு திறம்பட செய்கின்றது என்பது கேள்விக்குறியே??
அதே போன்று வங்கியாக தொழிற்படும் அமான வங்கி குறித்த நிலுவையை மத்திய வங்கியில் பேனுமிடத்து வட்டி தொகை பற்றிய கேள்விக்கு என்ன பதில் என்பது யாருக்கும் தெரியாது.
ஒரு வேலை ஜம்மியத்துல் உலமா COMMERCIAL வங்கிக்கு எழுத்து மூலம் வட்டி தொகையை பெற விரும்பவில்லை (வட்டியில்லா கணக்கு) என்பதை அறிவித்து இருக்க முடியும்,
அதோடு COMMERCIAL வங்கியில் காசோலைகொடுக்கல் வாங்கல் இலகுவானதும் பாதுகாப்பானதுமாகும்.
பெரும்பான்மையாக இந்துக்கள் வாழும் ஒரு நாட்டுக்கு இலங்கையில் சிறுபாண்மையினராக வாழும் முஸ்லிம்கள் ஒன்றிணைந்து வழங்கியிருக்கும் இவ் நன்கொடையை வழங்க உதவி செய்த ஜமியதுல் உலமாவை பாராட்ட வேண்டியது இலங்கைவால் முஸ்லிம்களின் கடமையாகும்.-MN-


0 Comments