-Mohamed Infas-
இலங்கை நாட்டில் சிறுபான்மை சமூகமாய் வாழும் நாம் சில விடயங்களை முன்னெடுக்கின்ற போது அங்கு நமது மார்க்க சட்டத்திற்கு முரணாக சில விடயங்களை விரும்பியோ , வெறுத்தோ செய்ய நிர்பந்திக்கப்படுகிறோம்...
ஏனெனில் நமது மார்க்க சட்டமும் , நாட்டின் சட்டமும் முரண்படும் நிலை ஒன்று காணப்படுகிறது...
இப்படி முரண்பாடுகள் இருப்பதால் நம் நாட்டு அரசியலிலும், நிதி துறையிலும் நாம் நூறு வீதம் பேணுதலாய் இருக்க முடியாது என்றே நான் கருதுகிறேன்..
ஆனால் முடியுமான அளவு நாம் தவிர்ந்து கொள்ளலாம் என்பதே எனது கருத்தாகும்...
உதாரணமாக நமது ஊருக்கு , மாவட்டத்திற்கு , பிரதேசத்திற்கு உரிய உள்ளூராட்சி சபைகளுக்கு நல்ல மார்க்கம் தெரிந்த, பண்பாடு உள்ள, செயல் திறன்மிக்க, ஆளுமை உள்ள ஒருவரை அனுப்ப வேண்டும் என்று நினைகிறோம்
இப்படி நினைப்பது தவறா ?என்று வினவினால் நாம் எல்லோரும் ஒருமித்த குரலில் சொல்வது இதில் என்ன தவறு உள்ளது , இதை தானே எதிர்ப்பார்க்கிறோம் என்போம்...
மேலே உள்ள தகைமைகள் எல்லாம் உள்ள, நல்ல இபாததான , பண்பாடான ஒருவர் இப்பொழுது உள்ளூராட்சி மன்றம் ஒன்றின் தலைவர் ஆகிவிட்டார் என்று வைத்து கொள்வோம்...
இப்பொழுது அவர் நாம் எல்லாம் எதிரபார்த்ததை விட நன்றாக நிர்வாகம் செய்வார் என்றும் வைத்து கொள்வோம், அதே நேரம் நாம் எதிர்பாராத சில விடயங்களையும் அவர் செய்வார்....
அவர் பதவி வகிக்கும் பகுதியில் உள்ள ''சாராய தவரனைகளுக்கு'' அவர் தான் அனுமதி கொடுக்க வேண்டும் , ''பன்றி இறைச்சி'' வியாபாரத்திற்கு அனுமதி கொடுக்க வேண்டும், ''பன்சலை'' நிகழ்சிகளுக்கு அனுசரணை கொடுக்க வேண்டும், ''இசை நிகழ்ச்சிகளுக்கு'' அனுமதி வழங்க வேண்டும்...
எதற்கெடுத்தாலும் அடுத்தவர்களையும், இஸ்லாமிய இயக்கங்களையும் பிழை கண்டு பிடிக்கும் நாம் இதற்கு எடுக்கும் தீர்வு என்ன?
அதிகம் நன்மை செய்து கொஞ்சம் பாவம் செய்யலாம் என்பதா?
அல்லது முஸ்லிம்கள் அரசியல் செய்ய கூடாது என்பதா?
''பேஸ்புக்'' பத்வாதாரிகளே வெளியே வாங்க....


0 Comments