இலங்கை ஓர் சிங்கள பௌத்த நாடு என ஜாதிக ஹெல உறுமய கட்சி தெரிவித்துள்ளது. இலங்கை சிங்கள பௌத்த நாடு என்பதனை கூறுவதற்கு நாம் தயங்க வேண்டியதில்லை என ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் கட்சி அறிவித்துள்ளது.
நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவிற்கு பதிலளிக்கும் வகையில் இந்த ஊடக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அண்மையில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு இது சிங்கள பௌத்த நாடு என யார் சொன்னார்கள் என விஜயதாச ராஜபக்ச பதில் கேள்வி எழுப்பியிருந்தார். இந்நிலையில் இது குறித்து தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்திய ஹெல உறுமய, இந்த நாடு சிங்கள பௌத்த நாடு என்று கூற நாம் எவரும் தயங்க வேண்டியதில்லை.
சிங்களமும் பௌத்தமும் ஒன்றை ஒன்று பிரிக்க முடியாதவை. அமைச்சரின் கருத்து மக்களை அதிருப்தி அடையச் செய்துள்ளது. விஜயதாச ராஜபக்ச போன்ற புத்தி ஜீவிகள் இவ்வாறு கருத்து வெளியிடுவது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அமைச்சரின் இக்கருத்துக்கு ஏற்கனவே சில சிங்கள பௌத்த அமைப்புக்கள் எதிர்ப்பை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


0 Comments