இன்றைய நாளில் பெரும்பாலான பெண்களுக்கு கருப்பையில் தோன்றும் குறைபாடுகள் ஃபைப்ரொய்ட் கட்டிகள் மற்றும் அடினோமையோசிஸ் கட்டிகள் கட்டிள்தான். இந்தக் கட்டிகளுக்கான சிகிச்சை யாக கருப்பையை அகற்றவேண்டி இருந்து வந்தது. அதற்கு மாற்றாக அமைந்திருக்கிறது நவீன எம்ஆர்ஜிஎஃப்யூஎஸ் சிகிச்சை . இச்சிகிச்சை யின் மூலம் கர்ப்பப் பையை அகற்றாமலேயே நிரந்தரத் தீர்வு கிடைக்கிறது.
கர்ப்பப்பையில் வரக்கூடிய ஃபைப் ரொய்ட் மற்றும் அடினோமையோசிஸ் கட்டிகள் புற்றுநோய் கட்டிகள் அல்ல. அவற்றை எளிதாகக் கரைத்துவிட முடியும். பொதுவாக எல்லா வகையான பெண் களுக்கும் எளிதாக வரக்கூடிய கர்ப்பப்பை கட்டிகள் இந்த இரண்டும்தான்.
உண்மையில் இக் கட்டிகள் ஹார்மோன் சுரப்பிகளின் மாற்றத்தால் வரக்கூடியவை. இவற்றை எளிதாக செ யலிழக்கச் செய்து கரைத்துவிட முடியும்.
இக்கட்டிகளை அகற்ற மாத்திரைகள் மற்றும் GNRH எனப்படும் ஹார்மோன் சிகிச்சை முறையே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாத்திரை என்பது வலி நிவாரணி மட்டுமே. இவை இரண்டுமே பலவித பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.
மேற்கண்ட இரண்டு சிகிச்சை முறைகளும் குறிப்பிட்ட காலத்திற்குப் பின்னர் தோல்வி அடையும். அதன்பின்னர், கர்ப்பப்பையை அகற்றுதலே இறுதித் தீர்வாக நடைமுறையில் இருந்துவருகிறது. கர்ப்பப்பையை அகற்றிய பின் பெண்களுக்கு வரக் கூடிய உபாதைகள் ஏராளம். கர்ப்பப்பை அகற்றப்பட்ட பெண்களுக்கு சிறுநீர் கழிப்பதில் பிரச்சினை, வயிற்றுவலி போன்றவை அடிக்கடி தோன்றும். மேலும், திருமணமாகாத பெண்களுக்கும், திருமணமாகி குழந்தைப்பேறு இல்லாத பெண்களுக்கும் கர்ப்பப்பையை அகற்றி விட்டால் அவர்களால் தாய்மைப் பேற்றை அடைய முடியாத சூழல் உருவாகிவிடும்.
இவற்றைத் தவிர்க்கும் முகமாக அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதே ‘எம்ஆர்ஜிஎஃப்யுஎஸ்’ (Magnetic Resonance Guided Focused Ultra Sound) எனும் தொழில்நுட்பம். இதில் ச த்திர சிகிச்சை என்கிற பேச்சுக்கே இடமில்லை. எனவே, இரத்த இழப்பு இல்லை. கதிரியக்கமும் கிடையாது. முக்கியமாக, கர்ப்பப்பையில் எவ்வகையான பாதிப் பும் ஏற்படாது. இரண்டு அல்லது மூன்று மணி நேரத்தில் கட்டிகளை முற்றிலுமாக செ யலிழக்கச் செ ய்துவிடமுடியும்.
இந்த சிகிச்சை யை எடுத்துக்கொள்ளும் பெண்கள் மருத்துவமனையில் தங்கவேண்டிய அவசியம் இல்லை. சிகிச்சை முடிந்த உடனேயே வலி பறந்து போய்விடும். மறுநாளே வேலைக்குப் போகலாம். சிகிச்சை முடிந்த ஆறு மாதங்களுக்குள் கட்டிகள் முற்றிலுமாக செ யலிழந்து கரைந்து விடும். அது வரையிலும் எந்தத் தொந்திரவும் இருக்காது.
எம்ஆர்ஐ ஸ்கேன் மெஷினுடன் போகஸ்ட் அல்ட்ரா ச வுண்ட் எனும் உபகரணம் பொருத்தப்பட்டிருக்கும். இந்த உபகரணத்தில், சிகிச்சை க்கு வரும் பெண்கள் படுத்துக்கொள்ள வேண்டும். போகஸ்ட் அல்ட்ரா சவுண்ட் உபகரணம் படுத்திருக்கும் பெண்ணின் வயிற்றுப் பகுதியில் கட்டிகள் எங்கிருக்கின்றன, எந்த அளவில் இருக்கின்றன, எத்தனை இருக்கின்றன என்பதை மிகத் துல்லியமாகக் காட்டும். அதனை மருத்துவர்கள் எம்ஆர்ஐ ஸ்கேன் மொனிட்டர் மூலம் கணித்து போகஸ் அல்ட்ரா ச வுண்ட் உபகரணம் மூலம் வெப்பத்தை உண்டாக்குவர். இது தாங்கிக் கொள்ளக்கூடிய வெப்பம்தான். இந்த வெப்பத்தின் மூலம் கட்டிகளின் செ ல்கள் முற்றிலுமாக அழிக்கப்படும்.
ஃபைப்ரொய்ட் மற்றும் அடினோமையோசிஸ் கட்டிகள் குழந்தைப் பேற்றுக்குத் தடையாக இருக்கிறது என்றால் சிகிச்சை முடிந்த பெண்கள் உறுதியாக தாய்மைப் பேற்றை அடைய முடியும்.
சில பெண்களுக்கு ஒரே கட்டி மிகப் பெரிதாக வளர்ந்திருக்கும். சில பெண்க ளுக்கு சின்ன சின்ன கட்டிகளாக பல கட்டி கள்கூட இருக்கலாம். ஆனால், எவ்வகை யான கட்டியாக இருந்தாலும், எத்தனை எண்ணிக்கையில் இருந்தாலும் ஒரே நாளில் சிகிச்சை அளிக்கலாம் என்பது Magnetic Resonance Guided Focused Ultra Sound சிகிச்சையின் சிறப்பு அம்ச ம்.
டொக்டர் பியூலா இம்மானுவேல்
மின்னஞ்ச ல்: mrgfus@bharatscans.com
தொலைபேசி: 0091 444 5555555
0 Comments