Subscribe Us

header ads

மரணத்தின் தருவாயில் இருந்தவர் பிழைத்த அதிசயம்: நெகிழவைக்கும் தாய் பாசம்


பிரித்தானியாவில் மரணத்தின் தருவாயில் இருந்த தாயை அவரது குழந்தை காப்பாற்றிய சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
ஹோலி செயுங்( Hollie cheyung 36) என்ற பெண் மையொகார்டிடீஸ் என்ற இதய நோய் மூலம் பாதிக்கப்பட்டார்.
இதையடுத்து அவர் பிரித்தானியாவின் பிர்மின்கம் நகரில் உள்ள குயின் எலிசபெத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவரை மருத்துவ தாதிகள் பரிசோதனை செய்துகொண்டு இருந்தனர்.
அப்போது அவரது  இதயத்தின் செயல்பாடு மீண்டும்மோசமடைந்தது. இதையடுத்து அவருக்கு இதயமாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள மருத்துவர்கள் முடிவு செய்தனர்.
ஆனால் ஹோலியின் கணவர் ஜேஸசன்(jason) தங்களது மூன்று வயது குழந்தை ஜோர்டானை (jordon) இரவு தாயின் அருகிலேயே படுக்க வைத்தார்.
அடுத்த நாள் அவரை பரிசோதித்த மருத்துவ தாதிகள் அவரது இதய துடிப்பு முன்னேற்றமடைந்ததை கண்டுபிடித்தனர்.
மேலும் 10 நாட்கள் கழித்து அவரது இதயம் முழுமையாக குணமடைந்ததையடுத்து அவரது இதயத்தில் பொருத்தியிருந்த இயந்திரத்தை அகற்றினர். மேலும் அவரது இதயம் தற்போது முழு ஆரோக்கியமாக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மருத்துவர்கள் தெரிவிக்கையில் அவரது இதயம் முழுமையாக பாதிக்கப்பட்டதால் அவருக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்தோம்.
ஆனால் அவரது குழந்தையை அருகில் படுக்கவைத்த சில நாட்களிலேயே அவர் முழுமையாக குணமடைந்துவிட்டார். இதற்கு அவர் குழந்தை மீது வைத்திருந்த அளவுகடந்த தாய் பாசமே காரணம் என்று தெரிவித்துள்ளனர்.



Post a Comment

0 Comments