இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையில் உள்ள பகுதி காஸா. காஸாவிற்கும் இஸ்ரேலுக்கும் அடிக்கடி சண்டை நடந்து வருகிறது. இதன்விளைவாக காஸா பகுதியில் வேலையின்மை விகிதம் அதிகரித்து வருகிறது.
இதுகுறித்து உலக வங்கி வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் ‘‘மத்திய கிழக்கு நாடுகளில் காஸாவில் வேலையின்மை விகிதம் 43 சதவீதமாக உள்ளது. இதிலும் குறிப்பாக இளைஞர்களில் வேலைவாய்ப்பு இல்லாதோர் எண்ணிக்கை 60 சதவீதமாக உயர்ந்துள்ளது.
தடைகள் மற்றும் மோதல் இல்லாத காசாவின் கால் பகுதியில் உள்நாட்டு மொத்த உற்பத்தி அடங்கியிருப்பதாக உலக வங்கி குழு மதிப்பிட்டுள்ளது.
இங்குள்ள மக்கள் தொகையில் 39 சதவீதம் மக்கள் வறுமை கோர்ட்டிற்குக்கீழ் உள்ளனர். சுமார் 80 சதவீத மக்கள் அரசு உதவியுடன் வாழ்ந்து வருகிறார்கள். 32 மைல் எல்லையில் சுமார் 7 மைல் எல்லையில் உள்ள 1.8 மில்லியன் மக்கள் போதிய சுதந்திரம் இல்லாமல் வாழ்ந்து வருகிறார்கள்.
ஒரு குறிப்பிட்ட போராளிகள் காஸாவை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதால், இஸ்ரேல் காஸா மீது தொடர்ச்சியாக போர் தொடுத்து வருகிறது. மேலும், இஸ்ரேல், எகிப்து நாடுகள் கடத்தலுக்கு உதவிய சுரங்கங்களை மூடியதால் காஸாவின் பொருளாதாரம் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.


0 Comments