Subscribe Us

header ads

புங்குடுதீவு சம்பவம் : பொலிஸார் மிகவும் கண்ணியமாக நடந்துள்ளனர் ; பொதுமக்கள் பாராட்டு


யாழ்ப்பாணத்தில் கடந்த சில நாட்களாக நடை பெற்ற வன்முறைச் சம்பவங்களின் போது  பொலிஸார் மிகவும் கண்ணியமாக நடந்து கொண்டுள்ளதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில் பார்க்கும் போது பொலிஸார் கடந்த காலங்களை போன்று அடவடித்தனமான நடவடிக்கைகளில் ஈடுபடாததுடன்  பொது மக்களுக்கு துன்பங்கள் ஏற்படாவண்ணம் மிகவும் கவனமாக நடந்து கொண்டுள்ளமை பலருடைய பாராட்டுதல்களையும் பெற்றுள்ளது.
புங்குடுதீவு மாணவி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி படுகொலை செய்யப்பட்டமையை கண்டித்து யாழ்ப்பாணத்தில் கடந்த புதன் கிழமை மிகவும் அமைதியான முறையில் பொது மக்களினால் ஹார்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது.
இந்தவேளையில் குறித்த படுகொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரை யாழ். நீதிமன்றத்தில் பொலிஸார் ஆஜர் செய்யப்படவிருந்த நிலையில் நீதிமன்ற த்தின் மீது  இளைஞர் கும்பல் மிகவும் மிலேச்சத்தனமான முறையில் தாக்குதல்களை மேற்கொண்டு நீதிமன்றத்தை சேதப்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து அமைதியை நிலை நாட்ட முயன்ற பொலிஸார் மீது இடம்பெற்ற தாக்குதலின்போது ஐந்து பொலிசார் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் பத்திற்கும் மேற்பட்ட பொலிஸார் சிறு சிறு காயங்களுக்கு உள்ளாகினர்.
இந்நிலையிலேயே பொலிஸாரின் செயற்பாடு குறித்து பொதுமக்கள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments