Subscribe Us

header ads

பொது தேர்தலுக்கு தயார் : ஆணையாளர் அறிவிப்பு


பொதுத் தேர்தலொன்றை நடத்துவது குறித்து இதுவரை யாரும் தமக்கு உத்தியோகபூர்வமாக அறியத் தரவில்லை. ஆயினும் எவ்வேளையிலும் பொதுத் தேர்தலொன்றை நடத்துவதற்கு தாம் தயாராக இருப்பதாக தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
தேர்தல் இடாப்புக்களின் மீளாய்வு தொடர்பில் தேர்தல் திணைக்களத்தில் இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தைக் கலைக்க வேண்டிய தேவையில்லை. எதிர்வரும் ஏப்ரல் மாதம் வரைக்கும் அதன் காலத்தை நீடிக்க முடியும். அப்படியும், ஜனாதிபதி பாராளுமன்றத்தைக் கலைப்பாராயின், 52 நாட்கள் கால எல்லைக்குள் நாம் தேர்தலை நடாத்துவதற்கு தயாராகவே உள்ளோம்.
மட்டுமன்றி, பொதுமக்களின் நலன் கருதி இனிவரும் தேர்தல்களை சனிக்கிழமை தினங்களில் நடத்துவதற்கே தீர்மானித்துள்ளோம்.
தேர்தல்கள் தொடர்பில் தற்போது இளைஞர்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இதற்கென ஆரம்பிக்கப்பட்ட முகநூல் கணக்கு உட்பட்ட செயற்பாடுகளின் ஊடாக நாம் தொடர்ந்தும் பொதுமக்களை விழிப்புணர்வூட்டும் பணிகளை முன்னெடுக்கவுள்ளோம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments