போர் வெற்றிக் கொண்டாட்டங்களினால் தமிழீழ விடுதலைப் புலிகளின் மனங்களே காயப்படும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
வடக்கில் போர் வெற்றி கொள்ளப்பட்டு ஆறு ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ளன.
இன்று அரசாங்க ஊடகங்கள் போர் வெற்றிக் கொண்டாட்டங்கள் நடத்தக் கூடாது என செய்தி வெளியிடுகின்றன.
இவ்வாறு கொண்டாடுவதனால் ஒரு தரப்பின் மனங்கள் காயப்படும் என குறிப்பிடுகின்றனர்.
யாருடைய மனங்களும் காயப்படாது, தமிழீழ விடுதலைப் புலிகளின் இதயங்களே போர்வெற்றிக் கொண்டாட்டங்களினால் காயப்படும்.
பெரும்பான்மை தமிழ் மக்கள் போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதனை விரும்புகின்றார்கள்.
போருக்கு சென்று இன்று கல்லறைகளில் உறங்கிக் கொண்டிருக்கும் எங்கள் பிள்ளைகள் எங்களை சபிக்கின்றார்கள்.
முதுகெலும்பு இல்லாத தரப்புக்கள் இந்த அரசாங்கத்தை நடத்துகின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே இந்த அரசாங்கத்தை வழிநடத்துகின்றது.
ஒரேவிதமான எண்ணங்கள் உடையவர்கள் இன்று ஒன்றுகூடியுள்ளனர்.
உரிய முறையில் சிந்திக்கா விட்டால் தேர்தலில் வெற்றியீட்ட முடியாது.
மைத்திரி யுகத்தின் நடவடிக்கைகளை மக்கள் கண்கூடாக பார்க்க முடிகின்றது.
அவ்வாறு தெரியாவிட்டால் அவர்கள் குருடர்களாகவே இருக்க வேண்டுமென விமல் வீரவன்ச தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.-TW-


0 Comments