Subscribe Us

header ads

இன்று மியான்மரில் நடந்து கொண்டிருக்கும் இன அழிப்பின் சூத்திரதாரி அஸ்வின் விராத்து என்ற புத்த துறவிதான்



இவர் 14ம் வயதில் பள்ளிப்படிப்பை துறந்து புத்த துறவியாக தன்னை மாற்றி கொண்டார் , சிறு வயதில் இருந்தே ஏழ்மையில் வாழ்ந்த சிறுவனுக்கு இஸ்லாமியர்களை கண்டால் வெறுப்பு கொள்வான், ஏனேனில் பர்மாவின் வியாபாரமும் , செல்வமும் இசஸ்லாமியர்களை நம்பியே இருக்கிறது , 


2001-ம் ஆண்டு 969 என்ற இயக்கத்தை ஆரம்பித்தான், ஆரம்பிக்கப்பட்ட இரண்டு வருடத்தில் 2003-ம் ஆண்டு தீவிரவாத செயல்களுக்காக 25 வருடம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான்,

969-ன் விரிவாக்கம் ,

9- புத்தரின் ஒன்பது சிறப்பம்சங்கள்
6- புத்த சாஸ்திரத்தின் சிறப்புக்கள்
9- பௌத்தர்களின் சிறப்பம்சங்கள் என்பதை தாங்கி நிற்கிறது ,

ஆனால் 2010-ம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டவுடன் தென் சேன் அரசுக்கு தன் முழு ஆதரவையும் அளித்து 2011-ம் ஆண்டு தென் சேனை ஆட்சிக் கட்டிலில் அமர வைத்த சூத்திரதாரி இந்த துறவிதான்,

2011ம் ஆண்டிலிருந்தே இஸ்லாமிய விரோத பேச்சுக்கள், பயிற்சிகள் முதலியவை அதன் உறுப்பினர்களுக்கு கொடுக்கப்பட்டு 2012-ம் ஆண்டு அதற்கான அறுவடையை கலவரங்கள் மூலம் அடைய ஆரம்பித்ததார்,

969 இயக்கத்தின் முதன்மை குறிக்கோள் இஸ்லாமிய வியாபாரத் தலங்களை கொள்ளையடித்து விட்டு கொளுத்துவது, இஸ்லாமியர்களின் வீடுகளை கொள்ளையடிப்பது, இஸ்லாமிய பெண்களை மணமுடித்து பௌத்தர்களாக மாற்றுவது மற்றும் பர்மாவை ஒரு முஸ்லிம் கூட இல்லாத பிரதேசமாக மாற்றுவது இவைகளே,

இந்த புத்த துறவியை உலக நாடுகள் கண்டிக்காத வண்ணம் பாதுகாத்து வருவது மியான்மர் அரசாங்கம், அதன் அதிபர் தென் சேன், 2013-ம் ஆண்டு டைம் இதழ் விராத்தை பேட்டி எடுத்த போது அவர் கூறியது "புத்த மதம் அமைதியானது தான் அதற்காக நாய்களோடு (இஸ்லாமியர்கள்) உறங்க முடியாது " என்று கூறியது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது . டைம் இதழ் அவரை தீவிரவாதி என்று முத்திரை குத்தியது,

இந்த விசயத்திலும் தென் சேன் தலையிட்டு "டைம் இதழ் ஊடக தர்மத்தை இழந்து ஒருதலை பட்சமாக உள்ளது , விராத் எங்களின் பாதுகாவலர், புனிதமானவர் அவரை விமர்சிக்க டைம் இதழுக்கு தகுதியில்லை" எனப் பேட்டியளித்தார்,

மற்றும் "எங்கள் அரசாங்கத்தை வழிநடத்தும் வழிகாட்டி எனவும் புகழ்ந்து தள்ளினார்".

2013-ம் ஆண்டு தன் வாகனத்தில் குண்டு வைத்து விட்டு , பழியை இஸ்லாமியர்கள் மீது போட்டு மிகப் பெரிய இன அழிப்பை நடத்தினார், அது இன்றுவரை தொடர்கிறது,

2014-ம் ஆண்டு இலங்கையில் பொதுபலசேனா நடத்திய மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய விராத்து நாம் இருவருமே ஒன்று சேர்ந்து செயல்பட வேண்டும் என விரும்புகிறேன் எனக்கூறி தன் புனிதத்துவத்தை! வெளிப்படுத்தினார்,

இந்த இனப்படுகொலைகளில் UNO இதுவரையில் பாரிய கண்டனங்கள் தெரிவிக்காதவாறு பார்த்துக் கொண்டு வருவது யூதர்கள்தான்,

எந்த இனமும் அவர்களாகவே அவர்களைப் பாதுகாத்து கொள்ள வேண்டும் என்பதுதான் நமக்கு உலகின் எல்லா இன அழிப்பு சம்பவங்களும் தெரிவிக்கின்ற வாக்குமூலங்கள்!

இனிவரும் காலம் அம்மக்களுக்கு நல்லதாக அமையட்டும் !


Post a Comment

0 Comments