-Muhammad Iqbal-
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு
இன்று இலங்கையில் அரசியல் விடயங்கள் குறித்த செய்திகள் வரும்போதும் பர்மாவில் நடக்கும் இனப்படுகொலைகள் குறித்த செய்திகள் வரும் போதும் எங்களுடைய முஸ்லிம் சகோதரர்கள் ஆவேசமாக சிங்கள மக்களுக்கு பதிலளிப்பதை நாம் காண்கின்றோம்.
இன்னும் சிலர் ஒரு படி மேலே போய் தூசனங்களை அள்ளி இறைப்பதையும் காணக்கூடியதாய் இருக்கின்றன.
அவன் காபிர்.அவனை எப்படி திட்டினாலும் அவனுக்கு மானம் ரோசம் என்பது இல்லை.அவனும் பதிலுக்கு அல்லாஹுவை திட்டிக்கொண்டே இருக்கின்றான்.
முகநூலில் பல சிங்கள சகோதரர்களே பர்மாவில் நடக்கும் இனப்படுகொலையை கண்டித்து எழுதி இருக்கும் போது, அதே பதிவுக்கு சென்று எங்களின் அறிவிலிகள் சிலர் சிங்களவனை திட்டுகின்றனர்.
இவர்கள் அங்கு சென்று தூசன வார்த்தைகளை கொண்டு பிண்ணூட்டங்களை இடுவதன் மூலம் என்ன தான் சாதிக்கப்போகிறாரோ தெரியவில்லை.
ஆனால் ஒன்று மட்டும் நன்றாக விளங்குது,கட்சிகள் என்ற அடிப்படையில் பிரிந்து நிற்கின்ற சிங்களவர்களை,முஸ்லிம்களுக்கு எதிராக ஒன்று சேர்த்து விடுவார்கள் எனத்தோன்றுகின்றது.
அல்லாஹ் மீது சத்தியமாக,பர்மா மக்களுக்காக ஸுஜூதில் விழுந்து அல்லாஹுவிடம் பிரார்த்திக்கின்றேன். எனது நட்பு வட்டத்தில் முன்னூறுக்கும் மேற்பட்ட பிக்குகள் இருக்கின்றார்கள். அரசியல் பதிவுகளை பகிரும் போது இடைக்கிடை, இஸ்லாமிய பேரறிஞர்களின் ஒலி ஒளி நாடாக்களையும் அவர்களுக்கு காட்சிப்படுத்துகின்றேன்.அவர்கள் அல் குர்ஆனை திறந்து படிக்க வேண்டும்.இதோ குர்ஆன்.இதை சற்று படி என்றால் கூட அவர்கள் படிக்க மாட்டார்கள்.அவர்களின் சிந்தனையை தூண்டும் விதத்தினாலான ஒலி ஒளி நாடாக்களை அவர்களுக்கு காட்சிப்படுத்தும் போது,அல் குர்ஆனில் பிழைகளை கண்டு பிடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் புரட்டிப்படிக்க ஆரம்பித்து விடுவார்கள்.
அங்கு தான் அவர்களுக்கு “சாக்”அடிக்கும்.அதாவது இறைவன் தன் அடியானுடன் கதைப்பதை அவர்கள் உணர்வார்கள்.இப்படியான செயல்களில் நாம் ஈடுபடுவதை விட்டு விட்டு lanka true news, Upfa bright future, Neth fm, Hiru fn, news first உட்பட பல சிங்கள மொழி முகநூல் பக்கங்களுக்கு சென்று வீரத்தை காட்டுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.
நாம் கோழைகள் அல்ல. நமக்கு நல்லதோர் எதிர்காலத்தை அல்லாஹ் காட்டித்தந்திருக்க, நாம் அதனை உதாசீனம் செய்து விட்டு,சிங்ளவரகளை சண்டைக்கு இழுப்பது முறையல்ல.
எமது கருத்துக்கள் யார் மனதும் புண்படாமல் இருக்கவேண்டும் அல்லாஹ்வுக்காக இனிமேல் இதுபோன்று நடந்து கொள்ளாதீர்கள். எல்லாம் வல்ல அல்லாஹ் எமது சமூகத்தை காப்பாற்றுவானாக.
ஆமீன்.


0 Comments