பொதுபல சேனா அமைப்பின் பொது செயலாளர் நேற்று முன்தினம் நாடு திரும்பி இருந்த நிலையில் நேற்று அவ்வமைப்பு கொழும்பில் விஷேட ஊடக மாநாடு ஒன்றை நடத்தியிருந்தது.
இதன் போது கருத்து வெளியிட்ட பொதுபல சேனா அமைப்பின் பொது செயலாளர் ஞானசார தேரர் இன்று இலங்கையில் உள்ள பல சிங்கள பெயர்களில் உள்ள ஊர்கள் முற்று முழுதாக முஸ்லிம் மயாமாகிவிட்டத்தாக குற்றம் சுமத்தியதுடன் அதற்கு உதராணமாக புள்ளிவிபரங்களையும் வெளியிட்டார்.
அவர் சுட்டிக்காட்டிய புள்ளிவிபரங்கள் இவை….
புளுகஹதென்ன சிங்கள குடும்பங்கள் 0 முஸ்லிம் குடும்பங்கள் 2736
கசாவத்த சிங்கள குடும்பங்கள் 14 முஸ்லிம் குடும்பங்கள் 2584
உடவெளிகேடிய சிங்கள குடும்பங்கள் 0 முஸ்லிம் குடும்பங்கள் 3590
தொடங்கோல்ல சிங்கள் குடும்பங்கள் 6 முஸ்லிம் குடும்பங்கள் 3293
அகுறன ஒரு சிங்கள குடும்பமாவது இல்லை
தெளம்புகஹாவத்த சிங்கள குடும்பங்கள் 28
வராகஸ்தென்ன சிங்கள குடும்பங்கள் 2
மல்வானஹின்ன சிங்கள குடும்பங்கள் 7
உரிகொள்ள சிங்கள குடும்பங்கள் 0
தேல்கஸ் தென்ன சிங்கள குடும்பங்கள் 5
பங்கொல்லா மட சிங்கள குடும்பங்கள் 6
இது ஒரு (ஹரிஸ்பத்துவ) பிராதேச செயலாளர் பிரிவுக்கு கீழ் உள்ள கிராம சேவைகர் பிரிவுக்கு உற்பட்ட தகல்கள் என சுட்டிக் காட்டிய அவர் இன்று சிங்கள பெயர்கொண்ட ஊர்களை முஸ்லிம்கள் ஆக்கிரமித்துள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
ஞான சார தேரர் அவர்களே இருநூறு வருட வரலாற்றை கொண்டதும் அப்போது ஒரு முஸ்லிமுக்கு( இஸ்ஸதீன் என்பவருக்கு) சொந்தமான மாத்தறை இஸ்ஸதீன் டவுனில் ஆயிரக்கணக்கான சிங்கள குடும்பங்கள் வசிப்பதும் ஒன்பது முஸ்லிம் குடும்பங்கள் மட்டமே வசிப்பதும் உங்களுக்கு தெரியுமா ????


0 Comments