இது சிங்கள நாடு அல்ல என்ற நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவின் கூற்று இந்த நாட்டு சிங்கள மக்களை அவமதிக்கும் செயல் என பெபிலியான சுனேத்ரா தேவி பிரிவெனாவின் விகாராதிபதி கலாநிதி அபயதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்த “நாடு சிங்கள நாடு என்று எவ்வாறு சொல்கிறீர்கள், காட்டுங்கள்” என நீதி அமைச்சர் கூறிய கருத்து குறித்து தாம் அதிக கவனம் செலுத்தியுள்ளோம் எனவும் தேரர் கூறியுள்ளார்.
இந்த கருத்தை தான் முழுமையாக நிராகரிக்கின்றேன். இது போன்ற கருத்துக்களை சமூகமயப்படுத்துவதனால்,இலங்கையில் ஏற்படவுள்ள பிரிவினைவாதம் மேலும் பலமடையும் என்பதனை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
இது தொடர்பில் எந்தவொரு ஊடகத்திலும் விளக்குவதற்கு தான் தயாராகவுள்ளேன். நீதியமைச்சரை திறந்த விவாதமொன்று நான் அழைக்கின்றேன். அவ்வாறு வராது போனால், நீதியமைச்சர் நாட்டிலுள்ள சகல சிங்கள மக்களிடமும் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும் எனவும் தேரர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


0 Comments