-Mohamed Muhusi-
கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டத்தில் உள்ள அரபு மத்ரஸாக்களில் இறுதி வருடத்தில் கற்றுக் கொண்டிருக்கும் 200 மாணவர்கள், 45 ஆலிம்கள்,15 மஸ்ஜிதுகளின் இமாம்கள் ஆகியோருக்கு வத்தளை ஹுனுப்பிட்டி இப்னு மஸ்வூத் அரபுக் கல்லூரியில் ஒரு நாள் கருத்தரங்கு அண்மையில் இடம் பெற்றதாக கல்லூரியின் அதிபர் அஷ்ஷெய்க் நூமான் ஹஸ்ரத் தெரிவித்தார்.
இதன் போது ஷரீஆவில் முற்படுத்த வேண்டிய அம்சங்கள் மற்றும் முறைகள், மக்கள் அணுகு முறைகள் மற்றும் பிரச்சார உக்திகள் முதலான தலைப்புக்களில் ஜாமியா நளீமிய்யா கலாபீட பிரதிப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஏ.ஸி.அகார் முஹம்மத் மாணவர்களுக்கு விளக்கமளித்ததாக அவர் தெரிவித்தார்.



0 Comments