-Abul Kalam-
கல்பிட்டி பிரதேச சபைக்கு உட்பட்ட பணயடிசோலை எனும் ஊரின் அதிகமான மக்கள் வாழும் பிரதேச வீதியின் அவலமே இது.......
ஒரு விசேட தகவல் இந்த வீதியில் அதிகமாக முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களே வசிக்கிறார்கள் ஆனால் இப்போது அவர்கள் விரக்தியின் உச்சத்தில் இருக்கிறார்கள்.
இந்த வீதியை சீர் செய்வதாக பலரும் வாக்குருதி அள்ளி வீசி வீசியே இந்த வீதி மிக மோசமடைந்து விட்டது. இந்த வீதியில் தான் காங்கிரஸ் அமைப்பாளர் வசிக்கிறார்.
மற்றும் கடந்த காலங்களில் யஹ்யாவின் ஆலோசகராக இருந்தவர் வசிக்கிறார். இந்தப்பகுதி மக்கள் அனைத்து காங்கிரஸ் வேட்பாளர்களுக்கும் வாக்களித்துள்ளார்கள் UNP UPFA என்பவற்றுக்கு வாக்களித்தவர்களும் வசிக்கிறார்கள் ஆனால் யாரும் இவ்வீதியை கவனிப்பது இல்லை.
இந்த படங்களில் நீங்கள் காணும் காட்சி கடும் மழை பெய்து ஓய்ந்து பல நாட்களின் பின் காணப்படும் நிலையே உண்மையில் கடும் மழை பெய்தால் முழங்கால் வரை தண்ணீர் கிடக்கும்.
யாரவது முன் வந்து இந்த பாதையை சீர் செய்து தருமாறு பணிவுடன் வேண்டுகின்றோம். தயவுசெய்து வாக்குறுதிகள் தந்துவிட்டு செல்ல யாரும் வர வேண்டாம். செய்ய முடியுமென்றால் மாத்திரம் வந்து பார்வையிடவும்.








0 Comments