இறைவன் நபி ஆதம்,ஹவ்வா ( அலை ) அவர்களை சுவர்கத்தில் வைத்து “இந்த
மரத்தின் பக்கம் நெறுங்காதீர்கள்”. என கட்டளை பிறப்பித்தான். ஆனால்
சாத்தான் அவ்விருவர்களின் மனங்களை நெகிழச் செய்து ஹவ்வா (அலை) மூலமாக அந்த
மரத்தின் பக்கம் நெருங்கச் செய்தான். அதனைத் தொடர்ந்து அவ்விருவரும்
அப்பழத்தை புசித்தார்கள். ஈற்றில் என்ன நடந்தது என்பது பற்றி தாங்கள்
அறிவீர்கள்.
மேலே சுருக்கமாக குறிப்பிடப்பட்ட நிகழ்வை, முன்னால் ஜனாதிபதியை புடைசூழ
இருப்பவர்களினால் (எம்மவர்கள்) குருநாகலையில் நடைபெற்ற, மேலும்
இடம்பெறவிருக்கின்ற நிகழ்வுடன் சம்பந்தப்படுத்தியதாகவே எம்மனைவரினதும்
பார்வைகள் குவிக்கப்பட வேண்டும் என்பதே எனது நோக்கமாகும். இந்த சம்பவம்
முன்னால் ஜனாதிபதியின் அரசியல் பின்னனியாகவே இருக்கும் என்பதில்
கிஞ்சிற்றும் ஐயமில்லை. பெரும்பான்மைக்கு மத்தியில் ஒரு சிறு அங்கமாக
வாழும் நாம் மிகவும் விழிப்பாகவும் அவதானமாகவும் இருக்கவேண்டும்.
மஹிந்த எனும் விசாலமான அழகான படர்ந்த ஒரு மரத்தின் காய்களே பொதுபள
சேனாவும் அவரது தோழர்களும் மற்றும் ஏனையோர்கள் அவருக்கு பின்னால்
செயல்பட்டுக்கொண்டுருக்கிறார்கள்.
நபி ஆதம்,ஹவ்வா(அலை) அவர்களுக்கு இறைவன் எவ்வாறு கட்டளையிட்டானோ அவ்வாறே
எமது முஸ்லிம் சமூகமும் மஹிந்த எனும் மரத்தை நெறுங்கக்கூடாது. னெருங்கும்
பட்சத்தில் அதில் காய்க்கின்ற பழங்களை சாப்பிடுவதற்கு சாத்தான் வடிவிலான
சிலர் அந்த கனிகள் பற்றிய குணநலம் மற்றும் விட்டமின்கள் பற்றி பட்டியலிட்டு
மிகவும் முறையான விதத்தில் வகுத்துப் பெருக்கி அதனை எமது பொதுமக்கள்
மத்தியில் ஊட்டப்படும் என்பது நிச்சயமம். எனவே அந்த மஹிந்த எனும் மரத்தின்
நிழல்கூட படாமல் தூரமாக நிற்பதே நல்லாட்சிக்கான அடிப்படையாகும்.
இறைவனின் உத்தரவை மீறுவதற்கு சாத்தான் நபி ஆதம் ஹவ்வா (அலை) அவர்களுக்கு
எவ்வாறு அழகான முறையில் விளக்கம் கொடுக்கப்பட்டதோ அது போன்ற அழகான
விதத்தில் எமது முஸ்லீம் சமூகத்தில் இறுக்கின்ற, மஹிந்த எனும் மரத்தின்
நிழல் பற்றிய அழகான விளக்கத்தை எமது சமூகத்தில் இறுக்கின்ற சில அரசியல்
வாதிகளின் கையாக்களின் ஊடாக சில உலமாக்கள் புத்திஜீவிகள் என்று
சொல்லப்படுகின்றவர்களும் போதனைகளை மேற்கொண்டு வருவதனை நாம் காணக்கூடியதாக
இறுக்கின்றோம்.
ஆகவே, எமது முஸ்லீம் மக்கள் மஹிந்த எனும் மரத்தை நெருங்கவோ அதன் பக்கம்
சாயவோ அல்லது வேறு ஏதும் பறிக்கவோ செல்லக்கூடாது என்பதே முஸ்லீம்
சமூகத்தின் தற்போதைய நிலைப்பாடாக அமைய வேண்டும்.
எமது அரசியல் தலைவர்கள் உட்பட உலமாக்கள் அனேகமானவர்கள் முன்னால்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சி அதிகாரத்திற்க்கு பயந்து ஒடுங்கி,
துணிச்சலும் வீரமும் இல்லாத மேடை பேச்சுக்களையும் மற்றும்
அறிக்கைகளையும்,இன்னும் பள்ளிவாயல் ஊடாக இஸ்லாம் காட்டித்தந்த
சொற்பொழிவுகள் மூலம் நாம் கற்றுக்கொண்ட பாடங்கள் அதிகமதிகம்.
குறிப்பு: மேல் குறிப்பிடப்பட்ட விடயத்தை நபி ஆதம் ஹவ்வா (அலை)
அவர்களின் சம்பவத்துடன் ஒப்பீடாக இந்த “மஹிந்த எனும் மரத்தின் பக்கம்
செல்லாதே…”என்ற விடயத்தை பார்க்காது மேழெழுந்தவாரியாக வாசித்து பொருத்தமற்ற
விமர்சனங்ளை வெளிப்படுத்தி வீண் பிரச்சினைகளை எற்படுத்தக்கூடாது என்பதே
எனது பணிவான வேண்டுதலாகும்.
Abu shakeek


0 Comments