Subscribe Us

header ads

'நீங்கள் பேசாதிருப்பது நியாயமா? ' பலரை சாடி துண்டுப்பிரசுரங்கள்

'நீங்கள் பேசாதிருப்பது நியாயமா?' எனும் தலைப்பிடப்பட்ட துண்டுப்பிரசுரங்கள் ஆலையடிவேம்பின் பல்வேறு பகுதிகளிலும் இன்று போடப்பட்டுள்ளன.

மன சாட்சி உணர்வுள்ள பொதுமக்கள் என உரிமைகோரும் இத்துண்டுப் பிரசுரத்தில் புங்குடுதீவில் பரிதாபகரமாக கொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவின் மரணத்தின் பின் மௌனமாகிவிட்ட  ஆலையடிவேம்பு பிரதேசத்தில் செயற்படும் பெண்கள் அமைப்புக்கள், பாடசாலைகள், அரசியல்வாதிகள், அரச சார்பற்ற நிறுவனங்கள், உத்தியோகத்தர்கள் என பலரையும் சாடியுள்ளனர்.
மாற்று சமூகங்கள் உள்ளிட்ட நாடே அழும் போது நமக்கேன்  என இருப்பது அறியாமையா? அகம்பாவமா? சுயநலமா என பல கேள்விகள் துண்டு பிரசுரத்தில் தொடுக்கப்பட்டுள்ளன.-Virakesari-



Post a Comment

0 Comments