(றாபியின் கிறுக்கல்கள்)
அது…
கழுகுகளின் வானம்.
சிறகு விரிக்கும்
புறாக்களை
கண்ட இடத்தில்
கருவறுக்கும்
கழுகுகளின் வானம்.
ஓரிறைக் கொள்கையுடையோர்
எங்களால்
கொல்லப்படவேண்டியோர்
என
நரிகள் ஊளையிடும் காடு.
காவியுடைக்குள்
புகுந்திருக்கும்…
கத்தியோடலையும்
காவாலிகளின் கோட்டை.
பாராமுகமாய் இருந்து
விட்டுவிட்டோம்
பல உயிர்களின் கோட்டை.
இதோ…
மியான்மார்
ஒழுங்கைகளெல்லாம்
ஒழுகிக் கிடக்கின்றன
நம் சகோதர உயிர்கள்.
நீண்ட நாட்களாய்
போதி மர நிழலில்
காவிகள்
தீட்டிய கத்திகள்
இன்று நம் கழுத்தில்…
அம்மண தேசத்தில்
கோமணம் கட்டியவன்
குற்றவாளியாம்.
முஸ்லிமாய்
பிறந்ததற்காய்
மூச்சு நிறுத்தப்படும் சோதரா…
கலங்காதே,
உனக்கு
மரணமும் வெற்றியே..!
-SLMC VELICHAM-


0 Comments