இங்கிலாந்தில் இருந்து கொண்டு செல்லப்பட்ட ஒலிம்பிக் வளையம் பிரேசிலில் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
பிரேசிலில் 2016ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்ற நிலையில், கப்பல் மூலம் இங்கிலாந்தில் இருந்து பிரமாண்டமான ஒலிம்பிக் வளையம் கொண்டுவரப்பட்டுள்ளது.
மடுரெய்ரா பூங்காவில் பொது மக்களின் பார்வைக்காக ஒலிம்பிக் வளையம் வைக்கப்பட்டுள்ளது.
வளையத்தை அறிமுகப்படுத்தும் நிகழ்வில் சர்வதேச ஒலிம்பிக் குழுவின் ஒருங்கிணைப்புத் தலைவர் மற்றும் ரியோ நகர மேயர் உட்பட ஏராளமான பொது மக்கள் பங்கேற்றனர்.
31ஆவது ஒலிம்பிக் போட்டிகள் 2016 ஓகஸ்ட் 5ஆம் திகதி பிரேசில் தலைநகர் ரியோடி ஜெனிரோ ஆரம்பாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


0 Comments