நாம் எதனை நோக்கிப் பயனிகின்றோம்..? என்பதனை உள்ளத்தில் உறுதியாய்
நிறுத்தி எமது எட்டுக்களினை ஆழமாய் வைக்கும் போதே எமது இலட்சியத்தினை இன்று அல்லா
விட்டாலும் என்றோ ஒரு நாள் சுவைத்துக் கொள்ளலாம்.தனி மனிதனைப் பொறுத்த மட்டில் தன்
இலக்கினை மற்றவர்களுக்கு பகிரங்கப்படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை.தன்
இலக்கினை உள்ளத்தில் நிறுத்தி பயணித்தால் போதும்.ஆனால்,ஒரு கட்சி அவ்வாறு இருக்க
முடியாது.தாங்கள் எதனை நோக்கிப் பயணிக்கின்றோம் என்பதனை மக்களுக்கு தெளிவு படுத்த
வேண்டிய கடப்பாடு உள்ளது.இவைகளினைப் பார்த்தே மக்கள் ஒரு கட்சிற்கு
ஆதரவளிப்பதா..?? இல்லையா..?? என்பதனை தீர்மானிக்க வேண்டும்.
இலங்கை முஸ்லிம்கள் தங்களது வாழ்வினை சிறப்பாய் கொண்டு சென்றிட
இயலாமல் எத்தனையோ இன்னல்களுடனும்,தேவைகளுடனுமே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்
என்பதனை மறுக்க முடியாது.காணிச் சுவீகரிப்பு,உறுதிகள் வழங்கப்படாமை,தங்களது
கலாச்சாரங்களுக்கு அச்சுறுத்தல்,நுரைச் சோலை வீட்டித் திட்டப் பிரச்சனை போன்ற
பல்வேறு பிரச்சனைகள் உள்ளன.ஏன்..?? யுத்தம் முடிந்து 5 வருடங்களுக்கு மேல் ஆகின்ற
போதும் இன்னும் வடக்கில் யுத்த காலத்தில் இடம்பெயர்ந்த முஸ்லிம்கள் குடியேற்றப்படாமல்
படாமல் கூட உள்ளனர். ஏன்..??சுனாமி அனர்த்தம் முடிந்து நடந்து ஒரு தசாப்தம்
கழிந்தும் பாதிக்கப்பட்ட எத்தனையோ பேர் உரிய தீர்வின்றி தவிக்கின்றனர்.முஸ்லிம்கள்
தங்கள் தனித்துவத்தினை பாதுகாக்கவும் கரையோர மாவட்டம்,தென் கிழக்கு அலகு
என்பவற்றினையும் உணர்ந்து நிற்கின்றனர். இப்படி எத்தனையோ பிரச்சனைகளுக்கான
தீர்வினையும்,தேவைகளினையும் முஸ்லிம்கள் உணர்ந்து நிற்கின்றனர்.இந்த மு.கா
இவற்றில் எதனை நோக்கிப் பயணிக்கின்றது என்பது கேள்விக் குறியாகவே உள்ளது (தேர்தல்
காலத்தில் மாத்திரம் இவற்றினைக் கதைத்தால் இப் பிரச்சனைகள் தீர்ந்து விடுமா..?? ).
தமிழ் தேசியக் கூட்டமைப்பானது தமிழ் கைதிகள் விடுதலை,யுத்தக் குற்றச்
சாட்டு விசாரனை,படையினர் வசம் உள்ள காணிகள் விடுவிப்பு என பல்வேறு கோரிக்கைகளினை
முன் நிறுத்தி பயணித்துக் கொண்டிருக்கின்றது.தேர்தல் நடைபெறும் காலப் பகுதியிலும்
இதே கதைதான் அதன் பிற் பட்ட காலப்பகுதியிலும் இதே கதைதான்.யார் கதைக்க வந்தாலும்
இதே கதைதான்.பத்திரிகையில் அறிக்கை விடுவதேன்றாலும் இவைகளைத் தான்.ஆனால்,மு.கா இன்
நிலை எந்தளவில் உள்ளது...?? தேர்தல் முடிந்த பிறகு முஸ்லிம் காங்கிரசின் செயலாளர்
ஹசன் அலியினைத் தவிர யார் இது பற்றிக் கதைக்கின்றனர்? அறிக்கைகள் விடுவதென்றாலும்
ஏதோ சிறிய பிரச்சினைகளினை தான் கதைக்கின்றனர்.நாலு கூரைத் தகட்டினை வழங்கி விட்டு
சேவையாக சித்தரித்துக் காட்டுகின்றனர்.யானைப் பசிக்கு சோளகப் பொரியினைத் தருவது
போன்றே இன்று மு.கா தனது பயணப் பாதையினை அமைத்துள்ளது.
மு.கா என்ன சேவைகள் செய்துள்ளது? எனக் கேட்டால் “மு.கா இன் நோக்கம்
சேவைகள் அல்ல உருமைகளினை வென்றெடுப்பதே“என பதில் வருகின்றது.சரி,மு.கா எவ்
உரிமையினை வென்று மக்களுக்கு கொடுத்துள்ளது எனக் கேட்டால் அதற்கும் பதில் இல்லை.சரி,எதுவும்
பெற்றுக் கொடுக்காவிட்டாலும் பறவாயில்லை எதைப் பெற்றுக் கொடுக்க இன்று தனது
பயனப்பாதையினை அமைத்துள்ளது? எனக் கேட்டாலும் அதற்கும் பதில் இல்லை.எங்கே
செல்கிறது மு.கா..??
தற்போது மலர்ந்துள்ள நல்லாட்சியில் த.தே.கூ இன் முயற்சியினால்
சம்பூரில் முதலீட்டு சபையின் கை வசம் இருந்த 818 ஏக்கர்
காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.படையினர் கை வசம் உள்ள 217 ஏக்கர் காணிகள் ஆறு மாத காலத்தினுள் வழங்கப்படும் என்ற உறுதி மொழி
வழங்கப்பட்டுள்ளது.இது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலப்போராட்டத்திற்கு கிடைத்த
மா பெறும் வெற்றி எனலாம்.இது வரை காலமும் த.தே.கூ இன் கொள்கைப் போராட்டத்தினால்
தமிழ் மக்கள் அடைந்த இன்னலுக்கு இதுவே போதுமானதாகும் என்று கூறினாலும் தப்பில்லை.த.தே.கூ
போராடிய வடக்கு மாகாணத்திற்கு தமிழ் இன ஆளுநர் நியமனம்,பிரதம செயலாளர் நியமனம்
என்பன நல்லாட்சி ஏற்பட்டு ஒரு வார காலத்தினுள் நிறை வேறி உள்ளது.தமிழ் அரசியல்
கைதிகள் விவகாரத்தில் ஜாதிக ஹெல உறுமயவே தீர்வு வழங்கப்பட வேண்டும் எனக் கூறும்
அளவு திருப்பு முனை ஏற்பட்டுள்ளது.ஆனால்,மு.கா எதைச் சாதித்துள்ளது.முஸ்லிம்களின்
எதிரி என முஸ்லிம்களினால் தூக்கி வீசப் பட்ட மகிந்த ராஜ பக்ஸ காலத்தில் மாகாண ஆளுநராக ஒரு முஸ்லிம்
இருந்தார்.ஆனால்,இன்றைய நல்லாட்சியில் அதுவும் பறி போய்த் தான் உள்ளது.இன்றும்
அம்பாறை அரசாங்க அதிபராக முஸ்லிமைனை நியமிப்பதில் தோல்விதான் கண்டுள்ளது என்றும்
கூற முடியாது.முயற்சித் தால் தானே வெற்றியோ,தோல்வியோ பெற முடியும்..?? த.தே.கூ
போன்று மு.கா இவ் நல்லாட்சியில் பெற்றுக் கொண்ட எதையாவது குறிப்பிட முடியுமா..??
மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் இக் கட்சியினை பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு
மத்தியில் உருவாக்கி நடாத்திச் சென்ற போது மு.கா என்ன செய்துள்ளது என்ற வினாவிற்கு
“இக் உரிமைகளுக்காகவே” என்ற நொண்டிக் காரணம் கூறும் நிலையில் வைக்க வில்லை.துறைமுகத்தில்
தொழில் வாய்ப்பினை அள்ளிக் கொடுத்தமை,தென் கிழக்குப் பல கலைக் கழகம்,ஒலுவில் துறை
முகம் என சுட்டிக் காட்டத்தக்க எத்தனையோ செய்தே வைத்தார்.ஆனால்,மு.கா நிலை
என்ன..?? மர்ஹூம் அஸ்ரபினால் துறை முகத்தில் வழங்கப்பட்ட தொழில் வாய்ப்புக்களுக்கு
பாதிப்பு ஏற்பட்ட போது மு.கா என்ன நடவடிக்கை மேற்கொண்டது? தென் கிழக்குப் பல்
கலைக் கழகம் முஸ்லிம்களின் கைகளினை விட்டு நழுவிச் சென்று கொண்டிருப்பது தெளிவாக
விளங்கியும் வெங்காயம் உரிக்கின்றதா..?? அஷ்ரப் கொண்டு வந்த ஒலுவில் துறை முகத்
திட்டத்தினால் அப் பகுதி மக்கள் பலர் பாதிக்கப்பட்ட போதும் மு.கா எத் தீர்வினை
வழங்க முயற்சித்தது..?
இன்று அக்கரைப்பற்றினை முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ் சேவையினால்
நிரப்பி வைத்துள்ளார்,குட்டிக் குவைத் எனக் கூறும் அளவு ஹிஸ்புல்லாஹ்
காத்தாங்குடியை அலங்கரித்து வைத்துள்ளார்.மறைந்த அமைச்சர்களான அஷ்ரப்,அன்வர்
இஸ்மாயில்,மஜீத்,மன்சூர் அவர்களினது சேவைகள் இன்று பேசப்படுகின்றன. இவர்கள் செய்த
சேவைகள் வெளியில் தெரிகின்ற போதும் அமைச்சர் ஹக்கீம்,மு.கா உறுப்பினர்கள் செய்த
சேவைகள் மாத்திரம் ஏன் செய்ததாக விளங்குவதில்லை.இதிலிருந்தே சில விடயங்களிற்கான
தெளிவினைப் பெறலாம்.
முதலாவது மு.கா எதை நோக்கி தனது எட்டுக்களினை நகர்த்தி வருகின்றது
என்பதை தெளிவு படுத்த வேண்டும்..??
துறையூர் ஏ,கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.


0 Comments