Subscribe Us

header ads

தமிழ் மக்கள் தோல்வியடையவில்லை!– ஹெல உறுமய


இலங்கையில் 30 வருட காலமாக இடம் பெற்ற யுத்தத்தை நிறைவடைய செய்ததன் மூலம் வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் தோல்வியடையவில்லை என ஜாதிக்க ஹெல உறுமய தெரிவித்துள்ளது.

கொழும்பு சுதந்திர சதுர்க்கத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தேசப்பற்று தொடர்பில் கருத்து தெரிவிக்கும் சிலர் பயங்கரவாதத்தை அடக்குவதற்கு நடவடிக்கைகள் எதனையும் பின்பற்றவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, இந்நிகழ்வில் கருத்து தெரிவித்த அத்துரலியே ரதன தேரர்,
எதிர்கால நடவடிக்கையில் முக்கிய பொறுப்பானது தான் தேசிய கொள்கையின் ஊடாக நாடு, அரசியல் செயற்படுத்தலாகும்.

இந்த பொறுப்பானது ஜாதிக ஹெல உறுமய மனங்களில் காணப்படுகின்ற மிகப்பெரிய பொறுப்பாகும்.

எதிர்வரும் 05 வருடங்களுக்குள் நாட்டில் இடமபெற்ற அசம்பாவிதங்கள் அனைத்தையும் மறந்து புதிய யுகம் ஒன்றை கட்டியெழுப்ப வேண்டும்.

எங்கள் நாட்டில் விவசாயம், மரங்கள், பூக்கள் மற்றும் போன்ற அனைத்தையும் பாதுகாக்கும் சமுதாயமொன்றை உருவாக்க வேண்டும்.

அதேபோல் விரிசல் ஏற்பட்டிருக்கும் தமிழ் சிங்கள நட்பு, இந்து, பௌத்த ஒற்றுமையை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டிய காலம் உருவாகியுள்ளதாக அத்துரலியே ரதன தேரர் தெரிவித்துள்ளார்.-tw-

Post a Comment

0 Comments