முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மக்கள் நிராகரித்துள்ளனர் என அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
20ம் திருத்தச் சட்டத்தின் பல்வேறு பிரச்சினைகள் விரைவில் தீர்க்கப்படும்.
எனினும், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு வேட்பு மனுக்களை வழங்குவது குறித்தே நான் கவனம் செலுத்துகின்றேன்.
அதில் பிழைகள் இடம்பெற அனுமதிக்க முடியாது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தனித்துவத்தை பாதுகாக்க வேண்டுமாயின் கை சின்னத்தில் போட்டியிட வேண்டும்.
யார் என்ன சொன்னாலும் நாம் அதனைச் செய்ய வேண்டும்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நடவடிக்கைகள் வருத்தமளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
மஹிந்த ராஜபக்ச, தம்மைப் பற்றி இன்னமும் உரிய முறையில் மதிப்பீடு செய்யவில்லை.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது பாரியளவில் பணத்தை செலவிட்டு தேர்தல் பிரச்சாரம் செய்த போதிலும் பெரும்பான்மை மக்கள் மஹிந்தவை நிராகரித்தனர்.
சிறு அரசியல் கட்சிகள் எதிர்வரும் பொதுத் தேர்தலில் தனித்து போட்டியிட்டு வெற்றியீட்ட முடியாது.
இதனால் மஹிந்தவை பிடித்துக் கொண்டு அதிகாரத்தைக் கைப்பற்ற சில சிறு கட்சிகள் முயற்சிப்பதாக அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.


0 Comments