Subscribe Us

header ads

பொது தேர்தல் குறித்து தேர்தல் ஆணையாளரின் கருத்து


எதிர்வரும் பொது தேர்தல் பொதுவாக பார்த்தால் 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தான் இடம்பெற வேண்டும் என தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
எப்படியிருப்பினும் பொதுத் தேர்தல் ஒன்று நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்தால் அதற்காக தேர்தல் அலுவலக அதிகாரிகள் ஆயத்தமாகவே உள்ளதாக தேர்தல் ஆணையாளர் சிங்கள செய்தி சேவை ஒன்றிற்கு குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்றத்தின் காலம் நான்கரை வருடம் நிறைவடைந்து விட்டதன் பின்னர் பாராளுமன்றத்தை கலைத்து விடும் அதிகாரம் ஜனாதிபதியிடம் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கமைய தற்போது இடம்பெறுகின்ற பாராளுமன்றத்தின் நான்கரை வருடம் நிறைவடைந்துள்ளதனால் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் பாராளுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை பொது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கமைய விரைவில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி தெரிவிப்பதாகவும் தேர்தல் ஆணையாளர் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments