Subscribe Us

header ads

அஹதியா ஆசிரியர்களுக்கு ''சிறுவர் உளவியல்'' தொடர்பான ஒரு பயிற்சி பட்டறை


கடந்த 02.05.2015 அன்று புத்தளம் சாஹிரா கல்லூரியில் புத்தளம் மாவட்டத்தை சேர்ந்த அஹதியா ஆசிரியர்களுக்கு ''சிறுவர் உளவியல்'' தொடர்பான ஒரு பயிற்சி பட்டறை இடம்பெற்றது...

சி.பீ.எஸ். தொண்டு நிறுவனத்தின் (CBS FOUNDATION) அனுசரணையோடு நடைபெற்ற இந்நிகழ்வில் இந்நிறுவனத்தின் ஸ்தாபக தலைவரும் ,போக்குவரத்து அமைச்சின் புத்தளம் மாவட்ட இணைப்பாளருமான திரு.எஸ்.எம்.இல்ஹாம் மரிக்கார் விரிவுரையை நடத்தினார்...

அத்தோடு இந்நிகழ்வுக்கு அஹதியா சம்மேளனத்தின் இணைப்பாளர் திரு.எம்.அஸ்கர் அவர்களும் மற்றும் புத்தளம் அஹதியாவின் செயலாளர் திரு.எப்.பதீன் அவர்களும் தங்களின் பங்களிப்பை நல்கி இருந்தனர்..

நூற்றுக்கணக்கான ஆசிர்யர்கள் இதில் பங்கு பற்றி பயன் பெற்ற அதே நேரம் அவர்களுக்கான சான்றிதழ்களையும் பெற்றுகொண்டமை குறிப்பிடத்தக்கது...







Post a Comment

0 Comments