Subscribe Us

header ads

லாஃவ்ஸ் சுப்பர்மார்க்கெட்களுடன் கைகோர்த்துள்ள மஹாபொல லொட்டோ


லொத்தர் துறையில் புதுமைகள் படைக்கும் தனது வலையமைப்பில் 35 லாஃவ்ஸ் விற்பனையகங்களை உள்வாங்கியுள்ளது.

தனது வலையமைப்பை விஸ்தரித்து வரும், மஹாபொல லொட்டோ, தனது வேகமான வளர்ச்சிப் பாதையில் மற்றுமொரு உள்ளடக்கமாக லாஃவ்ஸ் சுப்பர்மார்க்கெட் விற்பனை தொடருடன் கைகோர்த்துள்ளது. 
இதற்கமைய தனது மஹாபொல லொட்டோ டிக்கட் இயந்திரங்களை நாடு முழுவதுமுள்ள 35 லாஃவ்ஸ் சுப்பர்மார்க்கட்களில் நிறுவ முன்வந்துள்ளது. 
இதனடிப்படையில் சகல லாஃவ்ஸ் சுப்பர்மார்க்கெட்களும் விரைவில் முழு மஹாபொல லொட்டோ தயாரிப்புகளையும் கொண்டிருக்கும்.
லாஃவ்ஸ் சுப்பர்மார்க்கெட்களுக்கு விஜயம் செய்யும் எந்தவொரு விருந்தினரும், தமது பொருட்களை கொள்வனவு செய்வதற்கு மேலதிகமாக, தமது அதிர்ஷ்ட இலக்கத்தெரிவுகளை லாஃவ்ஸ காசாளரிடம் ஒப்படைக்கலாம். அத்துடன், உடனடியாக தமது மஹாபொல லொட்டோ தயாரிப்புகளை கொள்வனவு செய்து கொள்ளலாம். M4D, M Lotto, M Lotto Plus அல்லது Super M Lotto போன்ற அனைத்தும் இங்கு காணப்படும். 
சர்வதேச சந்தைகளில் காணப்படுவதை போல, லொட்டோ டிக்கட் இயந்திரங்கள் சகல சுப்பர்மார்க்கெட்களிலும், ஸ்ரோர்களிலும் மற்றும் விற்பனை நிலையங்களிலும் காணப்படுவதுடன், வாடிக்கையாளர்களுக்கு வசதியான முறையில் லொத்தர் சீட்டுகளை கொள்வனவு செய்ய உதவும் வகையில் இது அமைந்துள்ளது.
அதேவேளை, 35 லாஃவ்ஸ் சுப்பர் மார்க்கெட் விற்பனையங்களில் மஹாபொல லொட்டோ வலையமைப்பு உள்வாங்கப்பட்டமை என்பது மஹாபொல லொட்டோ தொடர்பில் முக்கியமான வாடிக்கையாளர் உறுதிமொழியான “உங்கள் அதிர்ஷ்ட இலக்கங்களை தெரிவு செய்யுங்கள்| என்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
அதிகளவு உயர் கல்வி வாய்ப்புகளை வழங்கும் நடவடிக்கைகளுக்கு பெருமளவு பங்களிப்பை வழங்குவது தொடர்பில் மஹாபொல லொட்டோ கவனம் செலுத்துவது பெருமைக்குரிய விடயமாக அமைந்துள்ளது. குறிப்பாக குறைந்த வசதிகள் படைத்த மாணவர்களுக்கு சிறந்த அனுகூலங்களை பெற்றுக் கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது. 
இந்த செயற்பாடு, பெரும்பாலும் தற்போது முன்னெடுக்கப்படும் அரசாங்கத்தினால் மேற்பார்வை செய்யப்படும் மஹாபொல உயர் கல்வி புலமைப்பரிசில் நிதியத்தினூடாக எய்தப்படுகின்றது.-vk-

Post a Comment

0 Comments