Subscribe Us

header ads

சிறுநீரக செயலிழப்பை தடுக்கலாம்

டொக்டர்.P.சங்கர், M.D.,D.M., சிறுநீரக சிறப்பு மருத்துவ நிபுணர் 
 


நம் உட­லி­லுள்ள கழி­வு­களில் அகற்­று­வதில் முக்­கிய ப்ங்கு வகிப்­பது சிறு­நீ­ரகம் தான். அத்­துடன் நம்­மு­டைய இரத்த அழுத்தம் சீராக வைத்­தி­ருப்­பதும் இதன் கட­மை­களில் ஒன்று எலும்­பு­களை உறு­திப்­ப­டுத்­து­வ­திலும், நோய் எதிர்ப்பு சக்­திக்குத் தேவை­யான இரத்த சிவப்ப ணுக்­களின் உற்­பத்­தியை தூண்­டு­வ­திலும், உட லிலுள்ள நீர் மற்றும் அமிலப் பொருள்­களின் அளவை சம­மாக வைத்­தி­ருப்­ப­திலும் இதன் பணி­களே.

அத்­துடன் நாம் சாப்­பிடும் உண வுப் பொருளின் கழி­வுகள் இரத்­தத்­துடன் சீறு­நீர கத்­திற்கு வரும் அதனை வடி­கட்டி, யூரியா, கிரி­யாட்டின் போன்ற கழி­வு­களை துல்­லி­ய­மாக இனம் கண்­ட­றிந்து அதனை சிறு­நீ­ராகப் பிரித்து வெளி­யேற்­று­கின்­றன.
அதனால் எமக்கு சிறுநீரகம் முக்கியமாக கருதப்படுகிறது. இந்நிலையில் சென்னையில் செயல்பட்டு வரும் ஸ்ரீ தைராய்ட் மற்றும் கிட்னிக்கான சிறப்பு மருத்துவமனையில் கிட்னிக்கான சிறப்பு சிகிச்சை நிபுணராக பணி யாற்றி வரும் டொக்டர் சங்கரை சந்தித்து சிறுநீரகத்தைப் பாதுகாப்பது எப்படி? என வினவியபோது அவர் அளித்த பதில்கள் பொதுவாக நம்முடைய மக்களுக்கு எப்போதும் தங்களுடைய உடல் உறுப்புகளைப் பற்றி அதிகம் தெரியாது.
ஆனால் அதனை ஒப்புக்கொள்ளமாட்டார்கள். எல்லாம் தெரிந்ததைப் போல் காட்டிக்கொள்வார்கள். ஒவ்வொரு உடலியல் சிக்கல்களுக்கும் நம்முடைய உடலே எதிர்ப்பு தெரிவித்து, அதற்கான அறிகுறிகளை எடுத்துரைக்கும் ஆனால் அதனை நாம் அலட்சியப்படுத்தி, நமக்கான வசதிகளுடன் பயணப்படுவோம். உடலியல் சிக்கல் முற்றி உடல் சோர்வடையும் போதோ அல்லது உடல் நலம் கெடும் போதோ தான் நாம் மருத்துவரை நாட வேண்டும் என்று எண்ணுவோம்.
ஆனால் அப்போதும் சந்திக்க மாட்டோம். இனிமேல் மருத்துவரை சந்தித்து மருந்துகளும் மாத்திரைகளும் சாப்பிட்டால் தான் குணமடையலாம் என்ற நிலையில் தான் மருத்துவர்களை சந்திக்கவே வருவார்கள். இது தேவையற்றது. அதிலும் சிறுநீரகம் தொடர்பான சிக்கல் என்றால் மருத்துவர்களிடம் தங்களுக்கு என்ன நேருகிறது என்பதை சொல்லவே தயங்குவார்கள். மருத்துவர்கள் தான் ஒவ் வொன்றாக கேட்டுத் தெரிந்து கொள்ள வேண் டும். இந்நிலை இன்றும் தொடர்கிறது.
சரி விட­யத்­திற்கு வருவோம்.
சிறு­நீ­ரகம் அல்ல சிறு­நீ­ர­கங்கள் பற்றி முதலில் பல அடிப்­ப­டை­யான விட­யங்­களைத் தெரிந்து கொள்­ளுங்கள் நம்­மு­டைய உடலில் உள்ள முக்­கி­ய­மான உறுப்­பு­களில் சிறு­நீ­ர­கமும் ஒன்று. நம்­மு­டைய உடலில் இரண்டு சிறு­நீ­ர­கங்கள் உண்டு. ஒவ்­வொன்றும் 150 கிராம் எடைக் கொண் டவை. எலும்­பு­களை வலு வான­தாக ஆக்­கு­வ­தற்கு தேவைப்­படும் விற்­றமின் - டியை செறி­வூட்­டு­கி­றது. அதே போல் உடலில் ரெனின் என்னும் பொருளை உற்­பத்தி செய்து இரத்த அழுத்தம் சீராக இருக்க உத­வு­கி­றது. எரித்­ரோ­பாய்டின் என்ற ஹார்­மோனை சுரக்கச் செய்து, இரத்த சிவப்­ப­ணுக்­களின் உற்­பத்­தியை தொடங்­கி­வைக்­கி­றது. இப்­படி பல ஆரோக்­கி­ய­மான செயல்­களில் ஈடு­படும் சிறு­நீ­ர­கத்தை நாம் ஆரோக்­கி­ய­மாக வைத் திருக்கிறோமா என்றால் இல்லை என்று தான் பதில் கிட்டும்.
சிறுநீரகத்தில் பலதரப்பட்ட நோய்கள் வருகின்றன. அதில் முக்கியமானது சிறுநீரக செயலிழப்பு. இது ஏன் ஏற்படுகிறது? எதனால் ஏற்படுகிறது? என்று கேட்டால்,சிறுநீரகப் பாதையில் நோய்க் கிருமிகளின் தாக்குதல், கற்கள் உண்டாகியிருத்தல், கட்டிகள் ஏற்பட்டி ருத்தல், அல்லது சதை வளர்ந்திருத்தல், ஒரு சிலருக்கு அரிதாக நீர்காமாலையால் பாதிக் கப்பட்டிருத்தல் என பல விடயங்களை குறிப் பிடலாம். நாங்கள் பாதிக்கப்பட்டிருக்கும் பகுதி மற்றும் பாதிப்பின் தன்மையை பொறுத்து அதனை நெப்ரைடீஸ் மற்றும் நெப் ராடீக் சின்ட்ரோம் என இரண்டு வகையாக குறிப்பிடுவோம.
இதில் குறிப்பிடப்பட வேண்டிய மற்றொரு அம்சம் என்னவெனில் நம்முடைய உடலிலேயே உற்பத்தியாகும் நோய் எதிர்ப்பு சகதியால் சிறுநீரகத்தில் உள்ள கீளா மெருஸ் என்ற பகுதி பாதிக் கப்படுவது தான். இத்தகைய பாதிப்பிற்கு ஆளானவர்களுக்கு அவர்களின் சிறுநீர் போகும் அளவு இயல்பை விட குறைவாக இருக்கும். முகம் மற்றும் கால்கள் வீங்கிவிடும். இரத்த அழுத்தம் அதிகரிக்கும். சிறுநீரில் புரதமும், இரத்தமும் சேர்ந்து வெளியேறும். சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் உண்டாகும். கடுமையான வயிற்றுவலி ஆகியவையும் ஏற்படும். இவையனைத்தும் சிறுநீரகத்தில் கற்கள் உண்டானால் கூட இருக்கும். அதனால் ஏதேனும் ஒரு அறிகுறி தென்பட்டால் கூட உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனைப் பெறவேண்டும்.
சரி இரவு நேரத்தில் பசி வந்தது. அதனால் தொடர்ச்சியாக துரித வகை உணவுகளை சாப்பிட்டேன். வயிறு பாதிக்கும் என்று எண்ணியிருந்தால் சிறுநீரகம் பாதித்துவிட்டது என்று மருத்துவர்களிடம் கூறும் நோயாளி களை நாங்கள் சந்தித்திருக்கிறோம். அவரை பரிசோதித்து சிறுநீரகத்தில் கற்கள் இருக் கின்றன என்பதை தெரிந்துகொண்ட பின் சிகிச்சையைத் தொடங்குகிறோம். நாங்கள் கண்டறியும் போது சிறுநீரகத்தில் கற்கள் சிறியதாக இருந்தால் அதிக தொல்லைகள் இல் லாமல் வெளியேற்றிவிடலாம்.. அதிகமான தண்ணீர் பருகுதல், சாப்பிடும் உணவில் இருக்கும் உப்பின் அளவை குறைத்தல், அதிக புரதச்சத்துக்ள் உள்ள மாமிச உணவை தற்காலிகமாக தவிர்த்தல் போன்ற சில பரிந்துரைகளை உறுதியாக பின்பற்றினால் சிறுநீரக கற்கள் கரைந்து சிறுநீரில் தானாகவே வெளியேறிவிடும். அதனை கரைக்க முடியாது என்ற நிலையில் நவீன முறையிலான சத்திர சிகிச்சை மூலம் அகற்றலாம்.
ஒரு முறை கற்­களை அகற்­றினால் அவை மீண்டும் மீண்டும் வரும் என்று ஒரு பிரி­வினர் தொடர்ந்து சொல்­லி­வ­ரு­கின்­றனர். ஆனால் அது உண்­மை­யல்ல. சிறு­நீ­ரக கற்­களை கரைத்த பின், மருத்­து­வர்கள் சொல்லும் உணவு முறையை உறு­தியாக பின்­பற்­ற­வேண்டும். அதை அலட்­சி­யப்­படுத் தினால் தான் மீண்டும் கற்கள் உண்­டா­கக்­கூடும்.

இதை தவிர்த்து ஒரு சில­ருக்கு சிறு­நீ­ரக பாதையில் சதை வளர்ச்சி ஏற்­பட்­டி­ருந்தால், அதனை உரிய முறையில் பரி­சோ­தித்து, அத னை சத்­திர சிகிச்சை மூலம் அகற்­றிக்­கொள்­ள வேண்டும். 

அத்துடன் தொடர்ச்சியாக மூன்று மாதம் வரை மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்க வேண்டும்.

ஒரு சிலருக்கு இரண்டு சிறுநீரகங்களும் பழுது அடைந்து, உடலிலுள்ள கழிவுப் பொருள்கள் வெளியேற முடியாத நிலையே சிறுநீரக செயலிழப்பு என்று குறிப்பிடுகிறோம். இது ஒருசிலருக்கு தற்காலிகமாகவும், ஒரு சிலருக்கு நிரந்தரமாகவும் ஏற்படக்கூடும். தற்காலிக செயலிழப்பிற்கு பல காரணங்களைக் கூறலாம். குறிப்பாக அதிகளவில் வயிற்று போக்கு ஏற்பட்டு உடலிலுள்ள நீர்ச்சத்து முற்றிலும் குறைந்துவிட்டால் திடிரென் தற்காலிக சிறுநீரக செயலிழப்பு ஏற்படும். அதே போல் நிரந்தர செயலிழப்பு என்பது சர்க்கரை நோயாளிகளுக்குத்தான் நிகழும்.
அதே போல் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூட நிரந்தர செயலிழப்பு ஏற்படக்கூடும். தொடர்ச்சியாக வலி நிவாரணிகளை பயன்படுத்துதல், பரம்பரை காரணமாக சிறுநீரகம் பாதிக்கப்படுதல், அதிகளவில் கற்கள் உண்டாகுதல், சிறுநீரகப் பாதையில் வைரஸ் கிருமிகளின் தொற்று தொடர்தல்.ஆகியவற்றின் காரணமாகக் கூட நிரந்தர செயலிழப்பை ஏற்படும். இதற்கு டயாலிஸஸ் என்ற தற்காலிக தீர்வும், சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை என்ற நிரந்தர தீர்வும் இருக்கிறது. ஆனால் அதற்கு முன் இதனை தடுப்பது தான் சரியான வழி. அதற்கு புகை பிடிப்பதையும், மது அருந்துவதையும் நிறுத்திக்கொள்ளவேண்டும்.தகுந்த உடற்பயிற்சி, சத்தான சமவிகித உணவுக் கட்டுப்பாடு, போதிய அளவிற்கு தவறாத பரிசோதனை ஆகியவற்றை மேற்கொண்டு வந்தால் சிறுநீரகத்தை பாதுகாக்கலாம்.
சிறுநீரகம் பற்றிய தங்களின் சந்தேகங்களுக்கு தொடர்பு கொள்ளவேண்டிய அலைபேசி எண் 0091 9443378489 மற்றும் மின்னஞ்சல் முகவரி drpshankarmd@yahoo.in

Post a Comment

0 Comments