Subscribe Us

header ads

ரோஹிங்கிய முஸ்லிம்களை “பினாங்கு” தீவில் மீள்குடியேற்ற திட்டம்


விரக்கமற்ற இனவெறித் தாக்குதலின் கோரப்பிடியில் இருந்து தப்புவதற்காக வேறு வழியின்றி கடல் வழியாக ஆபத்தான பயணங்களை மேற்கொண்டு வரும் மியன்மாரில் சிறுபான்மையினராக வாழும் ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு “பினாங்கு” தீவில் தற்காலிக குடியிருப்புக்களை கட்டுவதற்கு மலேஷியா திட்டமிட்டு வருவதாக அந்நாட்டு செய்தி ஒன்று தெரிவிக்கின்றன.
மலேசியாவின் வடக்கே அமைந்துள்ள “பினாங்கு” தீவு தஞ்சம் தேடி வரும் ரோஹிங்கிய முஸ்லிம்களை தற்காலிகமாக குடியமர்த்த மிகவும் பொருத்தமான இடம் என அந்நாட்டு தலைமை போலிஸ் அதிகாரி ஒருவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
மியன்மாரில் சுமார் 1.3 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகையை கொண்ட ரோஹிங்கிய முஸ்லிம்களை அண்டை நாடான பங்களாதேஷில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என மியன்மார் அரசு கருதி வருகிறது. இவர்களில் பலர் இந்த நாட்டில் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வருகின்றவர்களும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது. 

Post a Comment

0 Comments