Subscribe Us

header ads

அணியில் நீடிக்க நிர்வாகிகளின் ஆசைக்கு இணங்கினார்களா வீராங்கனைகள்?: இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணியில் கூத்து



இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணியில் நீடிப்பதற்காக நிர்வாகிகளின் ஆசைக்கு இணங்குமாறு வீராங்கனைகள் வற்புறுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக விசாரணை குழு தெரிவித்துள்ளது.

பெண்கள் கிரிக்கெட் அணியில் நீடிக்கவேண்டுமென்றால் நிர்வாகிகளை அட்ஜஸ்ட் செய்ய வேண்டும் என்று வீராங்கனைகள் நிர்பந்தப்படுத்தப்படுவதாக கடந்த ஆண்டு புகார் எழுந்தது. இதை தொடர்ந்து இது குறித்து விசாரணை செய்ய கடந்த நவம்பர் மாதம் ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி நிமல் திஸ்சநாயகே தலைமையில் மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இக்குழுவின் விசாரணையில் பெண்கள் கிரிக்கெட் அணி நிர்வாகிகள் பலர், வீராங்கனைகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு விளையாட்டு மந்திரி நேற்று கூறியுள்ளார்.

விரைவில் தவறு செய்த நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இவ்விவகாரத்தை சிங்கள பத்திரிகையான திவயின முதன்முதலில் வெளிச்சத்துக்கு கொண்டுவந்தது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments