Subscribe Us

header ads

வில்பத்து விவகாரம் தொடர்பாக இல்ஹாம் மரிக்கார் ஜனாதிபதி மற்றும் முக்கியஸ்தர்களுக்கு கடிதம்


மதிப்பிற்குரிய தாங்களுக்கு !

இன்று நம் நாட்டில் முக்கிய பேசுபொருளாய் மாறி இருக்கும் விடயம் தான் ''வில்பத்து'' குடியேற்ற விவகாரம்...

இப்பிரச்சினை இரண்டு விதமாக பேசப்படுகிறது ஒன்று ரிஷாத் என்பவருக்கு எதிரான அரசியல், இரண்டாவது ''இனவாதம்''

இதில் முதல் விடயமான ரிஷாத் அவர்களின் அரசியலை நாம் விமர்சிக்கவோ, ஆதரிக்கவோ விரும்பவில்லை ஏனெனில் அதற்கான தேவைப்பாடும் நமக்கில்லை...

ஆனால் இரண்டாவது விடயம் சம்பந்தமாய் பேசும் தார்மீக பொறுப்பு நமக்கு இருக்கிறது, அதனால் தான் இவ்விடயத்தை உங்களுக்கு சுட்டிக்காட்டுகிறேன் ...

''வில்பத்து'' விவாகரம் என்பதை இன்று சில ஊடகங்கள் ஒரு இனப்பிரச்சினையாய் மாற்ற முனைவதை நாம் தொடர்ந்து அவதானிக்கிறோம், நிச்சயமாக இந்த இனவாதிகளின் பின்னால் சில தீய சக்திகள் செயல்படுகிறதா? எனும் சந்தேகமும் நமக்கு எழுந்துள்ளது...

25 வருடமாய் அகதி வாழ்க்கை வாழ்ந்த இம்மக்கள் மீண்டும் அவர்கள் வாழ்ந்த இடத்திற்கு சென்று சொந்த மண்ணில் வாழ்வதற்கு இருக்கும் தடை தான் என்ன?

அதிலும் இரண்டு வருடமாய் நடைப்பெறும் இத்திட்டம் கட்டிடம் எல்லாம் கட்டி முடிக்க பட்டு அம்மக்கள் குடியேறும் சந்தர்ப்பத்தில் பேசப்படுவதும், குழப்பபடுவதும் ஏன்?

இது ஒரு சட்ட விரோத நடவடிக்கை எனில் ஆரம்பத்திலேயே அதாவது 'மஹிந்த ராஜபக்சவின்' ஆட்சியிலேயே ஏன் இதை தடுக்கவில்லை...?

அம்பாறை மாவட்டத்தில் சுனாமியால் பாதிக்க பட்ட மக்களுக்கு சவூதி அரசு கட்டி கொடுத்த ஆயிரக்கணக்கான வீடுகளுக்கும் இது தானே நடந்தது? ஊடகங்கள் இதை ஏன் பேசுவதில்லை?

இப்படி பல கேள்விகள் நமக்குள் எழுவதால் தான் இவ்விடயத்தை உங்களிடம் முன் வைக்கிறோம் .

இந்த நல்லாட்சியில் இதற்கு ஒரு ஆணைக்குழுவை நியமியுங்கள், விசாரணை செய்து நீதியை பெற்று கொடுங்கள் என்று உங்களை வினயமாய் வேண்டுகிறோம்...

இப்படியான நிலைகள் தொடரும் போது மத்தியகிழக்கு நாடுகளை சேர்ந்த தனவந்தர்கள் , முதலீடாலர்களிடமும் நம் நாடு தொடர்பில் ஒரு '
கருப்பு புள்ளியே'' உண்டாகும் என்பதையும் நீங்கள் அறிவீர்கள்...


பாலஸ்தீனுக்கும் , நேபாளுக்கும், ஆப்கானுக்கும், குரல் கொடுக்கும் நமது இஸ்லாமிய இயக்கங்களும் கூட இன்று இந்த ''வில்பத்து'' விவகாரத்தில் அமைதி காப்பது ஏன் என்றும் நாம் விடை தேடுகிறோம்...அவர்களின் மனதில் எது இருக்கிறது என்று நாம் அறியோம்...

ஆக அவர்களையும் இந்த நல்லாட்சியில் இணைத்து முஸ்லிம்களின் உரிமை, குடியேற்றம், கல்வி, பொருளாதாரம் அனைத்தையும் திறந்த மனதோடு பேச ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்துங்கள்...

நன்றி...
இப்படிக்கு...
எஸ்.எம்.இல்ஹாம் மரிக்கார்.
(போக்குவரத்து அமைச்சின் புத்தளம் மாவட்ட இணைப்பாளர் )

Post a Comment

0 Comments