-Abdul Wahid-
கண்ணு கலங்காம பாத்துக்கறேன்னு சொல்லி
கண்ணாலம் கட்டினான்.
கையில ரெண்டு புள்ளைய
கொடுத்துட்டு காணாமத்தான் போனான்.
ஆம்பள அவன் போயிட்டான்.
பொம்பள நா எங்க போக.
பெத்த மனசாச்சே....
இருபது பீடிகட்டு குடுத்தா
இருபது ரூவா கெடைக்கும்.
அதை வாங்கி சோறுபொங்கும் அன்னாடங்காச்சி நான்.
பதினைஞ்ச கட்டிபுட்டேன்
ஐஞ்சி இன்னும் கட்டனும்.
அதுவரைக்கும் அழாம இருடா
என் அழகு தங்கமே.
இருக்கிறதே ஒரு சேல.
இதுவும் கிழிஞ்சி போன
நீ தரையில தா தூங்கனும்.
ஏ ஆண்டவா இந்த ஏழையின்
வேண்டுதல் இன்னொரு
புடவை தானே.
இரக்கம் காட்டு இறைவா...
by .L G Kumara


0 Comments