வில்பத்து மற்றும் மன்னார் உள்ளிட்ட வனப்பகுதிகளை அண்டிய பிரதேசங்களில் இடம்பெயர்ந்தவர்களை, கடந்த அரசாங்க காலத்தில் அவ்வப்பகுதிகளில் மீள்குடியேற்றியமை ஏற்றுக்கொள்ள முடியாதது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளனர்.
இலங்கையின் வன விலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்பு சங்கத்தின் வெளியீடான ‘வாரண’ சஞ்சிகையின் 25 வது பதிப்பு ஜனாதிபதியிடம் நேற்று கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி, மீள்குடியேற்றங்களின் தன்மை குறித்து விபரித்தார்.
இதேவேளை, ஜனாதிபதி முதல் தடவையாக அனைத்து மாவட்ட செயலாளர்களையும் நேற்று சந்தித்துள்ளார்.
மாவட்ட மட்டத்திலான அபிவிருத்தி நடவடிக்கைள் மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.


0 Comments