Subscribe Us

header ads

விதியை மீறி விராத் கோஹ்லி காதலி அனுஷ்காவை சந்தித்ததாக சர்ச்சை


பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நேற்று மாலை நடந்த 55 ஆவது லீக் ஆட்டத்தில் பெங்களூர் ரோயல் சலஞ்சர்ஸ் அணி, டெல்லி டேர்டெவில்ஸ் அணியை எதிர்கொண்டது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பெங்களூர் ரோயல் சலஞ்சர்ஸ் அணி களத்தடுப்பை தேர்வு செய்தது.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 187 ஓட்டங்கள் குவித்தது. அதிகபட்சமாக அணியின் தொடக்க ஆட்டக்காரர் டீ கொக் 39 பந்துகளில் 9 பவுண்டரி, 3 சிக்சருடன் 69 ஓட்டங்களும், டுமினி 43 பந்துகளில் 4 பவுண்டரி, 3 சிக்சருடன் 67 ஓட்டங்களும்,எடுத்தனர்.

பின்னர் 188 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பெங்களூர் ரோயல் சலஞ்சர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விராத் கோஹ்லி, கெய்ல் ஆகியோர் களம் கண்டனர் 1.1 ஓவர்களில் பெங்களூர் அணி விக்கெட் இழப்பின்றி 2 ஓட்டங்கள் எடுத்து இருந்த போது மழை குறுக்கிட்டது.

அப்போது விராத் கோஹ்லி 2 பந்துகளில் ஒரு ரன்னுடனும், கெய்ல் 5 பந்துகளில் ஒரு ரன்னுடனும் களத்தில் இருந்தனர். மழை தொடர்ந்து பலமாக கொட்டியதால் ஆட்டத்தை தொடர முடியாத நிலை ஏற்பட்டது. இதை தொடர்ந்து விராத் கோஹ்லியும் கெயிலும் பெவிலியன் திரும்பினார்கள். சிறித்து நேரத்தில் கோஹ்லி விஐபி பகுதியில் அமர்ந்து இருந்த தனது காதலி அனுஷ்கா சர்மாவை சந்தித்து உள்ளார்.

மேலும் இதே பகுதியில் யுவராஜ் சிங் மற்றும் தினேஷ் கார்த்திக்கும் உள்ளனர்.

தொழில்நுட்ப ரீதியாக போட்டி முடியும் வரை அதாவது கடைசி பந்து முடியும் வரை வீரர்கள் தங்களுக்கு உரிய பகுதியில் இருந்து சென்று வேறு ஒருவரை சந்திக்க கூடாது. மேலும் ரசிகர்களுடன் கலந்து விட கூடாது.

ஆனால் விராத் கோஹ்லி அனுஷ்காவை போட்டியை பார்க்க வந்து இருந்த ரசிகர்கள் இருந்த பகுதியில் சென்று பார்த்து உள்ளார். இது சின்னசாமி ஸ்டேடியத்தின் மிகப்பெரிய திரையிலும் ஒளிபரப்பானது.

இது ஊழல் தடுப்பு பாதுகாப்பு நெறிமுறைகளை மீறிய செயலாகும் என ஊழல் மற்றும் பாதுகாப்பு மூத்த அதிகாரி ஒருவர் ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு தெரிவித்து உள்ளார். மழையால் ஆட்டம் முடிவுக்கு வந்து இருந்தால் பரவாயில்லை முடிவு அறிவிக்கபடுவதற்கு முன்பாகவே ஒரு அணியின் எதிர்கால தலைவர் இவ்வாறு செய்தது அழகல்ல என கூறினார்.


அவர் அணியின் கேப்டன் அதனால் விதிமுறைகள் அவருக்கு தெரியும். போட்டியின் போது யாரும் வீரர்களை சந்திக்க அனுமதி இல்லை. மற்றும் வீரர்கள் தங்களுக்கு உரிய பகுதியில் இருந்து செல்ல அனுமதியும் இல்லை. இந்த பிரச்சினை கண்டிப்பாக பிசிசிஐ க்கு கொண்டு செல்லப்படும் என அவர் கூறினார். -NF-

Post a Comment

0 Comments