Subscribe Us

header ads

ஏன் நாம் நமது உறவுகளுக்காக அல்லாஹ்விடம் உதவி தேடக்கூடாது சிந்தியுங்கள் மீடியாக்களை திட்டுவதை விட்டு அல்லாவிடம் கையேந்துவோம்.

அஸ்ஸலாமு அலைக்கும்

சகோதர சகோதரிகளே! நம்மால் முடிந்தது நமது மியான்மார் பர்மா சாகேதர சகோரிகளுக்காக நாளை அனைவரும் நோன்பு நோற்று அல்லாஹ்விடம் கையேந்துவோம்.கண்டிப்பாக அல்லாஹ் நமது துஆவாவை ஏற்றுக் கொள்வான் அவர்களுக்கு ஒரு விடிவு கிடைக்கும் அனைவரும் ஒன்று பட்டு ஒரே சத்தம் அல்லாஹு அக்பர். முன்வாருங்கள் முடிவெடுங்கள் நமது சொந்த தேவைகளுக்காக நாம் எத்தனை நோன்புகள் நோற்கிறோம் துவா செய்கிறோம் நமது உறவுகளுக்காக நாளை நோன்பு வைப்போம்.! ஏனெனில் பொருமையை கொண்டும்,தொழுகையை கொண்டும் அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்.
தன் அடியார்களைப் பிரார்த்தனை புரியும்படி அல்லாஹ் ஊக்குவிக்கவும் செய்கின்றான்.
(நபியே!) என் அடியார்கள் என்னைப் பற்றி உம்மிடம் கேட்டால், “நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன். அவர்கள் என்னிடமே (பிரார்த்தித்துக்) கேட்கட்டும். என்னையே நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்” என்று கூறுவீராக. (சூரா அல் பகரா 2 : 186)
“பிரார்த்தனை… அதுவே ஒரு வணக்கம்” என்று ஏந்தல் நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்.
நம் தேவைகளைக் கேட்பதற்கு, நம் மனப் பாரத்தை இறைவனின் முன்பு இறக்கி வைப்பதற்கு நமக்கு நன்மையையும் அள்ளித் தரும் அற்புத மார்க்கம்தான் இஸ்லாம்.
அல்லாஹ் ஏற்றுக்கொள்வான் என்ற உறுதியோடு பிரார்த்தனை செய்வது பிரார்த்தனையின் முக்கியமான அம்சம்.
“அல்லாஹ் இந்தப் பிரார்த்தனையை ஏற்றுக்கொண்டு (எனக்கு) விடையளிப்பான் என்ற நோக்கத்தோடு அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : திர்மிதீ)
“என் அடியான் என்னை எப்படி எண்ணுகின்றானோ அப்படி நான் நடந்து கொள்கிறேன்” என்று அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : முஸ்லிம், திர்மிதீ)
அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து, பூமான் நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத்து கூறிய பின் பிரார்த்தனையை ஆரம்பிக்கவும், முடிக்கவும் வேண்டும்.
“நிச்சயமாக அல்லாஹ் வெட்கமுள்ளவனும், சங்கையுள்ளவனுமாவான். ஒரு மனிதன் தன் இரு கரங்களையும் உயர்த்தி பிரார்த்தனை செய்தால் அதை ஒன்றுமில்லாமல் வெறுங்கையோடு திருப்புவதற்கு அல்லாஹ் வெட்கப்படுகிறான்” என ஸல்மானுல் ஃபார்ஸீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல் : திர்மிதீ)
ஏன் நாம் நமது உறவுகளுக்க்காக அல்லாவிடம் உதவி தேடக்கூடாது சிந்தியுங்கள் மிடியாக்களை திட்டுவதை விட்டு அல்லாவிடம் கையேந்துவோம்.

Post a Comment

0 Comments