தமக்கெதிராக மேற்கொள்ளப்படும்
நடவடிக்கைகள், சேறுபூசல்களையெல்லாம் மேலே உள்ள கடவுள்
பார்த்துக்கொண்டிருக்கிறார் என ஆன்மீக உணர்வுடன் தெரிவித்துள்ளார் முன்னாள்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச.
தேர்தல் தோல்வியின் பின் சற்று
ஒதுங்கியிருந்த அவர், பகிரங்க மக்கள் சந்திப்புகளுக்குப் பதிலாக நாட்டில்
இருக்கும் ஒவ்வொரு விகாரைகளுக்கும் விஜயம் செய்து அங்கு பூஜைகள் ஏற்பாடு
செய்து மக்கள் சந்திப்புகளை நிகழ்த்தி வரும் தொடர்ச்சியில் நேற்றைய தினம்
ஹிக்கடுவ தேவாலயத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போது மேற்கண்டவாறு
தெரிவித்துள்ளார்.
இங்கு மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
தான் எந்தப் பதவியையும் இதுவரை கேட்கவிலலையெனவும் அனைத்தும் மக்களாகத்
தந்ததெனவும் தெரிவித்துள்ளதோடு மங்கள சமரவீர தமது குடும்பத்திற்கு 18
பில்லியன் டொலர் வெளிநாட்டு சொத்து இருப்பதாக பொய்ப் பிரச்சாரம்
மேற்கொண்டுள்ளதாகவும் அவ்வாறு இருப்பின் அதை எடுத்து வந்து குறித்த
தேவாலயத்திற்கு ஒரு புதிய கட்டிடத்தைக் கட்டிக் கொடுக்கட்டும் எனவும்
தெரிவித்து இவ்வாறு தனக்கெதிராக மேற்கொள்ளப்படும் பிரச்சாரங்கள்,
சேறுபூசல்களை மேலே உள்ள கடவுள் பார்த்துக்கொள்வார் என தெரிவித்துள்ளமை
குறிப்பிடத்தக்கது.


0 Comments