[கத்தாரிலிருந்து எம்.ஏ.பீ. வசீம் அக்ரம்]
கத்தார் அல்சாத்
பகுதியில் வெளிநாட்டு சேவையாளர்கள் தங்கியிருக்கும் குடியிருப்பு தொகுதியின் ஒரு
பகுதி நேற்று மதியம் தீக்கிரையானது.
எகிப்து நாட்டினர்
வசித்த குடியிருப்பில் பொருத்தப்பட்ட வெப்ப கட்டுப்பாட்டு கருவியில் (Air
Condition) ஏற்பட்ட மின் ஒழுக்கே இத்தீவிபத்துக்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
தீ விபத்தின் போது
குடியிருப்பு அறையில் ஒருவரும் இல்லாத நிலையில் உடைமைகள் முற்றாக எரிந்து
நாசமானது.
சிவில் பாதுகாப்பு
வீரர்களினால் தீ உடனடியாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில் பொலிசார்
விசாரணைகளை முன்னெடுத்து செல்கின்றனர்.




0 Comments