Subscribe Us

header ads

புத்தம் போதிக்கும் யுத்தம்!

AHAMED DEEDAT


முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழும் நாடுகளுக்கிடையில், அனைத்து அடிப்படை உரிமைகளும் மறுக்கப்பட்டு அகதிகளை விட மோசமான நிலையில் பர்மாவவின் சிறுபான்மை முஸ்லிம் சமூகம் வாழ்கின்றது. எல்லாவற்றையும் விட மோசமாக பேச்சு சுதந்திரமும், கருத்து சுதந்திரமும் இல்லாத காரணத்தால் ஆண்டாண்டு காலமாக முஸ்லிம்களுக்கு எதிராக பௌத்தர்கள் நடத்தும் வன்முறைகள் உலக மக்களின் வெளிச்சத்திற்கு கொண்டு வரப்படாமலேயே இருந்துள்ளது.

புத்த மதம் சாந்தி, சமாதானம், அஹிம்சை ஆகியவற்றிற்கு பெருமை பெற்றது என்பது தான் உலக மக்கள் அறிந்து வைத்திருப்பது. ஆனால் இந்த புத்த பிட்சுக்களின் வெறியாட்டம் ஆயிரக்காணக்க முஸ்லிம்களையும், பழங்குடியினரையும் அழித்திருப்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். பெளத்தர்களின் மதவெறித் தன்மையை நாம் அண்மைய முஸ்லிம் இன ஒழிப்பில் உணர்ந்தது கொண்டோம். ஆனால், இஸ்லாம் பர்மாவில் வந்தேறிய காலம் முதலாகவே உணவிற்காக கூட ஒரு உயிரினத்தை கொல்ல தயங்கும் பௌத்தர்கள் தன்னுடைய மத வெறித் தன்மையினால் ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை கொன்று குவித்துள்ளனர். 

இணையதளத்தின் ஆளுமையினால், அண்மையில் முஸ்லிம்களுக்கு எதிராக பௌத்தர்களால் நடத்தப்பட்ட கலவரங்கள் உலக மக்களின் பார்வையில், முஸ்லிம்கள் பர்மாவிலும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை சிறிதளவு உணர வைத்துள்ளது. பர்மாவில் பல நூற்றாண்டுகளாக முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகளும் மனித உரிமை மீறல்களும் நடந்துகொண்டிருக்கும் போதிலும் நம்மில் பலரின் செவியில் முதல் முறையாக விழுந்திருக்கக் கூடியது சென்ற வருடம் ஜூன் மாதம் நடைபெற்ற ராக்கினே மாகாண கலவரமாகத் தான் இருக்கக் முடியும்.

இஸ்லாம் பர்மாவில் சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன்னதாக நுழைந்தது. அன்றிலிருந்து இன்று வரை பல மன்னர்கள், பல சாம்ராஜ்ஜியங்கள், ஆங்கிலேயர்களின் காலணியாதிக்கம், ஜனநாயகம், இராணுவ ஆட்சி என பல்வேறு முறைகளில் பல்வேறு மக்களின் ஆதிக்கத்தில் பர்மா இருந்துகொண்டு வருகிறது. எத்தனை நூற்றாண்டுகள் கடந்திருந்தாலும், எத்தனை சாம்ராஜ்ஜியங்கள் ஆண்டிருந்தாலும் அன்றிலிருந்து இன்றுவரை அகதிகளைப் போலத் தான் பர்மா முஸ்லிம்களின் நிலை உள்ளது. முஸ்லிம்களின் நிலையையும், முஸ்லிம்களுக்கு எதிராக பர்மாவில் காலங்காலமாக நடந்துகொண்டிருக்கும் வன்முறைகளும் தொடர் கதையாகவே அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. 

அல்லாஹ்வின் பாதையில் முஹம்மது நபி(ஸல்) அவர்களின் வார்த்தைகளை உலகம் முழுவதும் எடுத்து செல்வதற்கு நபித் தோழர்கள் பல கண்டங்கள், பல கடல்கள் தாண்டி சென்றனர். அதன் தொடர்ச்சியாக பர்மா மக்களிடையே இஸ்லாத்தை எடுத்துரைப்பதற்காக வந்திறங்கியவர் முஹம்மது இப்னு அல் ஹனஃபிய்யா. இவர் ஹிஜ்ரி 60ஆம் ஆண்டு (கி.பி.680) பர்மாவின் முதல் முஸ்லிமாக அந்நாட்டின் வங்காள விரிகுடாவின் கரைகளில் தனது காலடியை எடுத்து வைத்தார். இவரைத் தொடர்ந்து துருக்கி, பாரசீகம், அரேபிய தீபகற்பம், சீனா ஆகிய நாடுகளிலிருந்து இஸ்லாமியர்கள் வணிகர்களாகவும் மாலுமிகளாகவும் வரத் தொடங்கினர். 

அரசர் அனவ்ரஹாதா, கி.பி 1055ல் பர்மாவின் முதல் பேரரசை நிறுவுவதற்கு முன்னதாகவே முஸ்லிம்கள் பர்மாவின் முக்கிய வணிகங்களில் பங்கேற்று அங்கு குடியேறத் தொடங்கினர். முஸ்லிம்களின் வருகையாலும் அவர்களின் தூய்மையான இஸ்லாமிய மார்க்கத்தை அறிந்து கொண்டதாலும் பல பூர்வீக பர்மா மக்கள் இஸ்லாத்தை தங்களின் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டனர். 

கி.பி 9 ஆம் நூற்றாண்டில் சீனாவை தேடி நிலத்தின் வழியாக வந்த பாரசீகர்கள் பர்மாவின் வடக்கு எல்லை மூலமாக இங்கு குடியேற தொடங்கினர். சீன முஸ்லிம்களை பாந்தேயர்கள் (கச்ணtடச்தூண்) என்றும் பூர்வீக பர்மாவின் முஸ்லிம்களை பாதியர்கள் (கச்tடடிண்) என்றும் அழைத்தனர். அதுமட்டுமல்லாமல் அங்குள்ள பூர்வீக மக்களை திருமணம் செய்து கொள்வதன் மூலமாகவும் நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னதாகவே முஸ்லிம்கள் பர்மாவோடும் அதன் மக்களோடும் ஒன்றோடு ஒன்றாக கலந்து விட்டனர். 

16ஆம் நூற்றாண்டில் முஸ்லிம்கள் அதிக அளவில் புத்த மன்னர்களிடத்தில் வேலை செய்ய தொடங்கினர்.

கி.பி. 1550-1589 வரை ஆண்ட பயின்ட் நாங் எனப்படும் அரசன் முஸ்லிம்கள் தங்கள் உணவிற்காக கால்நடைகளை ஹலால் முறையில் அறுப்பதை தடை செய்தான். மேலும், முஸ்லிம்களின் பண்டிகைகளான ஈதுல் அல்ஹா (ஹஜ் பெருநாள்), ஈதுல் ஃபித்ரா (நோன்பு பெருநாள்) ஆகியவற்றை கொண்டாடுவதற்கு தடை விதித்து புத்த மன்னர்களின் கொடுங்கோல் ஆட்சியை நிரூபித்தான். இவன் முஸ்லிம்களை கட்டாயமாக புத்த மதத்திற்கு மதம் மாற்றம் செய்யவும் உத்தரவிட்டான். மறுத்த முஸ்லிம்களுக்கு வழக்கம் போல் மரண தண்டனை வழங்கப்பட்டது.

புத்த அரசர்களின் முஸ்லிம்களுக்கு எதிரான கொடுமைகளும் வன்முறைகளும் ஒவ்வொரு நூற்றாண்டும் அரங்கேறிக்கொண்டே இருந்தன. 18ம் நூற்றாண்டின் இறுதியில் போடவ்பயா எனும் புத்த அரசன் மையடு எனும் பகுதியை சேர்ந்த நான்கு பர்மா முஸ்லிம் இமாம்களை பன்றி இறைச்சி உண்ணும் படி வற்புறுத்தி அவர்கள் மறுத்த போது அவர்கள் நான்கு பேரையும் கொலைச் செய்து விட்டான்.

புத்த மன்னர்களின் சுமார் ஆயிரம் ஆண்டு ஆட்சியின் போது நடந்த முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளில் இது ஒரு துளியாகவே இருக்கக்கூடும். வரலாற்றில் பதிவு செய்யப்படாத பல்வேறு வன்முறை சம்பவங்களில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டு இருக்கலாம். இந்த புத்த மன்னர்களின் ஆட்சியின் போது தான் உலகின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று புத்த சாமியார்கள் அஹிம்சையை போதித்து பல்வேறு மக்களை அழைத்தனர். ஒரு பக்கம் புத்தர்கள் அமைதியானவர்கள், ஒரு எறும்பைக் கூட கொல்வதற்கு தயங்குபவர்கள் என்று உலக மக்கள் நினைத்துக் கொண்டிருக்க புத்த மன்னர்களின் கொடுங்கோல் ஆட்சிக்கு பர்மா ஒரு உதாரணம்.

அண்மையில் மியான்மர் அதிபர் தைன் ஸெய்ன், ரோஹிங்கியா முஸ்லிம்கள் நாட்டை விட்டு வெளியேறி ஐ.நாவின் அகதிகள் முகாமிற்கு செல்லவேண்டும் என்று திமிராக அறிக்கை வெளியிட்டிருந்தார். 

ஒரு மில்லியன் மக்கள் தொகையை கொண்ட ரோஹிங்கியா முஸ்லிம்களை மியான்மர் அரசு நாட்டின் குடிமக்களாக அங்கீகரிக்க மறுத்து வருகிறது. மியான்மரில் பல தலைமுறைகளாக வாழ்ந்துவரும் ரோஹிங்கியா முஸ்லிம்களை எந்த நாட்டையும் சாராதவர்களாகவும், சட்டவிரோத குடியேற்றக்காரர்களாகவும் சித்தரித்து வருகிறது மியான்மர் அரசு. 

மியான்மரின் முக்கிய எதிர்கட்சி தலைவரும், நேசனல் லீக்ஃபார் டெமோக்ரெஸியின்(என்.எல்.டி) தலைவருமான ஆங் சாங் சூகி , பல ஆண்டுகள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு விடுதலைச் செய்யப்பட்டவர். அவர் அண்மையில் பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றுள்ள ஆங் சாங் சூகி மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிரான கொடூரங்கள் குறித்து வாய் திறக்க மறுப்பதுடன் இவ்விவகாரத்தை தவிர்க்க விரும்புகிறார். 

“அமெரிக்காவும் இவ்விவகாரத்தில் குற்றகரமான மெளனத்தை சாதித்து வருகிறது. தென்கிழக்கு ஆசியா பகுதியில் உள்ள நாடுகள் சீனாவுடன் நட்புறவாக இருப்பதை தடுக்க அந்நாடுகளுடன் இனிமையாக நடந்து கொள்ள முயற்சிக்கும் அமேரிக்கா பர்மா முஸ்லிம்கள் விஷயத்தில் ஓரவஞ்சனையுடன் நடந்து கொள்கிறது என்று மட்டும் புரிகிறது. 

“தென்கிழக்கு ஆசியா அமெரிக்காவின் பொருளாதார வரைபடத்தில் மிகவும் தெளிவாக புலப்படாத பகுதியாக மாறி வருகிறது. ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு ஏற்பட்டிருக்கும் பிரச்சனை தீரும் வரை மியான்மருக்கு எதிரான பொருளாதார நடவடிக்கைகளை அமெரிக்கா வலுப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், அவர்கள் அதனை செய்யவில்லை! செய்யவும் மாட்டார்கள்.

Post a Comment

0 Comments