Subscribe Us

header ads

சவூதி பணிப்பெண்களின் சம்பளத்தை உயர்த்தவும்: தலதா அத்துகோறல


சவூதிக்கு வேலைவாய்ப்பை பெற்று செல்லும் இலங்கை பணிப்பெண்களின் சம்பளத்தை உயர்த்துமாறு அமைச்சர் தலதா அத்துகோறல கோரிக்கை விடுத்துள்ளார்.

சர்வதேச ஊடகமொன்றிற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த பணிப்பெண்களின் சம்பளத்தை 60 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்க வேண்டும் என தாம் எதிர்பார்ப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் அந்நாட்டு தூதரகத்துடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையினை அடுத்து இது தொடர்பில் ஆராய்வதற்காக விரைவில் குழுவொன்று இலங்கை வரவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சவூதியில் தற்போது பணிபுரியும் பணிப்பெண்கள் தலா ஒரு மாதத்திற்கு இலங்கை பெறுமதியில் 30 ஆயிரம் ரூபா முதல் 35 ரூபா வரையிலான சம்பளத்தை பெற்று வருகின்றனர்.

இத்தொகை குறைந்த பட்சம் 60 ஆயிரம் ரூபாவாக இருக்க வேண்டும் எனவும்,

50 ஆயிரத்திற்கும் 60 ஆயிரத்திற்கும் இடைப்பட்ட தொகையாவது வழங்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் கோரியுள்ளார்.

மேலும் குறித்த குழுவினரின் வருகையின் போது இலங்கை பணிப்பெண்கள் முகம் கொடுக்கும் துன்புறுத்தல்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள் குறித்தும் விசேட கவனம் செலுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சவூதிக்கு செல்லும் இலங்கை பணிப்பெண்களுக்கு உள்நாட்டு முகவர்களின் ஊடாக குறித்த வீட்டு எஜமானர்களினால் குறித்த பணத்தொகை முற்பணமாக வழங்கப்படுகின்றது.

அத்தொகையில் முழுத்தொகை குறித்த பணிப்பெண்களுக்கு கிடைப்பதில்லை, என உள்நாட்டு முகவர்கள் தெரிவிக்கின்றனர்.

இப்பணத்தொகை வழங்கப்படுதலை நிறுத்தினால் இந்த சம்பள அதிகரிப்பு சாத்தியப்படுவது இலகுவாக அமையும் என உள்நாட்டு முகவர்கள் தெரிவிப்பதாக அமைச்சர் தலதா அத்துகோறல மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments