Subscribe Us

header ads

தேடிப்போய் கரடியிடம் கடி வாங்கி, கடித்த கரடியை தாக்கிவிட்டு தப்பித்த விசித்திர மனிதர்...



போலந்து நாட்டில் பொழுது போகாமல் கரடிகள் காப்பகத்தில் நுழைந்த மனிதர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். 

தலைநகர் வார்சாவில் உள்ள மிருகக்காட்சி சாலையில் பாதுகாப்பு வளையத்தைத் தாண்டி கரடிகளுக்கான பகுதிக்குள் அத்துமீறி ஒருவர் உள்ளே நுழைந்தார். இதைக் கவனித்த ஒரு கரடி வேகமாக அவரை நெருங்கி அவரைத் தாக்கி அவரது கையை கடிக்கத் தொடங்கியது. எப்படியோ அதிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்ட அவர் அந்த கரடியை திருப்பித் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். 

இந்த சம்பவத்தை அங்கிருந்த ஒருவர் புகைப்படம் மற்றும் வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் பதிவேற்ற அது சமூகவலைதளங்களில் தீயாக பரவி  வருகிறது. இந்த விசித்திர செயலில் ஈடுபட்ட மனிதர் போதை மருந்து உட்கொண்டவர் போல காணப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். அவரை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.



Post a Comment

0 Comments