Subscribe Us

header ads

புத்தளம் மாவட்டத்திற்கான உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் விரைவில் நடைப்பெறவுள்ளது....

-Mohamed Infas-


புத்தளம் மாவட்டத்திற்கான உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் விரைவில் நடைப்பெறவுள்ளது....

இதனடிப்படையில் புத்தளம் மாவட்டத்திற்கு உட்பட்ட கல்பிட்டி பிரதேசத்திற்கும் தேர்தல் நடைப்பெறும்...

கல்பிட்டி பிரதேச சபை தேர்தல் என்பது ஒரு வித்தியாசமானது,
அதாவது இங்கு ஒருவருக்கு படித்தவன், ஆளுமை நிறைந்தவன், விசய ஞானம் உள்ளவன், மும்மொழி ஆற்றல் உள்ளவன், சிறந்த பேச்சாளன், எந்த அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மூலம் சேவை செய்ய கூடியவன் , பரந்த அரசியல் அறிவும் சமூக உணர்வும் உள்ளவன் , வெளிநாட்டு தூதரகங்கள் மற்று தொண்டு நிறுவனங்களை பயன்படுத்தி சேவை செய்பவன் என்பதற்கு அப்பால்...
எவன் சாராயமும், சல்லியும், சாப்பாடு கொடுக்கிறார்களோ அவர்களை தான் வெற்றி பெற செய்து மன்றத்திற்க்கு அனுப்புகிறார்கள்... இது வரை நடந்த உள்ளூராட்சி தேர்தல்களிலும் அனைத்து கட்சியிலும் இதனை தான் நாம் அவதானித்தோம்... ஆதலால் புத்தளம் மாவட்ட சுதந்திர கட்சி அமைப்பாளரும் , முன்னால் பிரதி அமைச்சருமான கே.எ.பாயிஸ் அவர்களிடமும்....

ஐக்கிய தேசிய கட்சி தொகுதி அமைப்பாளரும் முன்னால் புத்தள நகர சபை தலைவருமான ஏன்.எம்.நஸ்மி அவர்களிடமும் புத்தளம் மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளரும் , வடமேல் மாகாண சபை உறுப்பினருமான எஸ்.எச்,எம்.நியாஸ் அவர்களிடமும் நாம் கோருவது...


சாராயமும், பணமும் கொடுத்து மக்கள் வாக்குகளை பறிக்கும் சுயநலவாதிகளை புறம் தள்ளுங்கள்....
எதிர்வரும் கல்பிட்டி பிரதேச சபை தேர்தலுக்கான வேட்பு மனு தயாரிக்கும் பொழுது நல்ல சமூக சிந்தனை, கல்வி ஆளுமை உள்ளவர்களின் பட்டியலை தயாரியுங்கள்....

Post a Comment

0 Comments