-எம். எஸ். முஸப்பிர்
முந்தல் பிரதேச செயலகத்துக்குட்பட்ட மதுரங்குளியில் அமைந்துள்ள மேர்சி கல்வி வளாகத்தினால் மேற்கொள்ளப்படும் பல்வேறு தொழிற்பயிற்சி பாடநெறிகளை நிறைவு செய்தவர்களுக்கான நான்காவது பட்டமளிப்பு விழா, வளாக கேட்போர் கூடத்தில் சனிக்கிழமை இடம்பெற்றது.
மேர்சி கல்வி நிலைய பொறுப்பாளர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், இலங்கை மற்றும் மாலைதீவுகளின் குவைத் தூதுவர் அஷேய்க் யாகூப் யூசுப் அல் அதீகி பிரதம அதிதியாக கலந்து கொண்டு பாடநெறியினை பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ்களை வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில், மேர்சி கல்வி வளாகத்தினால் நடாத்தப்படும் பல்வேறு தொழில் பயிற்சி நெறிகளைப் பூர்த்தி செய்த 61 மாணவர்கள் சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டதோடு, அவர்களுக்குத் தேவையான தொழில் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன. -TM-
0 Comments