எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கு பின்னர் அமைக்கப்படுகின்ற பாராளுமன்றத்திலேயே வடக்கு, கிழக்கு பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.
மேலும் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கு பின்னர் நாட்டுக்கு புதிய அரசியலமைப்பு ஒன்றும் அறிமுகப்படுத்தப்படும். அதற்கான வேலைத்திட்டங்களை அடுத்த பாராளுமன்றத்தில் முன்னெடுப்போம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
வடக்கு, கிழக்கு பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் செயற்பாடுகள் எவ்வாறு அமையவுள்ளன என்றும் அதற்கு எவ்வாறான அணுகுமுறையை அரசாங்கம் முன்னெடுக்கும் என்றும் வினவியதற்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அமைச்சர் ராஜித சேனாரட்ன இந்த விடயம் குறித்து மேலும் குறிப்பிடுகையில்,
வடக்கு, கிழக்கு அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காணும் செயற்பாட்டை நாங்கள் விட்டு விடவில்லை. அதற்கான நடவடிக்கைகள் அடுத்த பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் முன்னெடுக்கப்படும். விரைவில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தல் நடத்தப்படவுள்ளது.
இந்நிலையில் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கு பின்னர் அமைக்கப்படவுள்ள புதிய பாராளுமன்றத்திலேயே வடக்கு கிழக்கு பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கு பின்னர் அமைக்கப்படவுள்ள பாராளுமன்றத்தின் ஊடாக நாட்டுக்கு புதிய அரசியலமைப்பு ஒன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். அந்த அரசியலமைப்பின் ஊடாக வடக்கு, கிழக்கு பிரச்சினைக்கான தீர்வும் உள்ளடக்கப்படும்.
புதிய அணுகுமுறையின் ஊடாக வடக்கு,கிழக்கு பிரச்சினைக்கு தீர்வுகாண நடவ டிக்கை எடுக்கப்படும். எனவே அடுத்த பாராளுமன்றத் தேர்தலின் பின்னரே இந்த விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்படும் என்றார்.-vk-


0 Comments