கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட யாழ்ப்பாணம், புங்குடுதீவைச் சேர்ந்த மாணவி வித்தியாவின் புகைப்படத்தையோ அல்லது அவர் மீதான வன்புணர்வுக் காட்சிகளடங்கிய புகைப்படங்களையோ சமூக வலைதளங்களில பிரசுரிக்க வேண்டாம் என பாதுகாப்பான இலங்கைக்கான பிரஜைகள் அமைப்பு கோரியுள்ளது.
கொழும்பில் இன்று செய்தியாளர் மாநாடொன்றை நடத்திய அவ்வமைப்பின் இணைப்பாளர் விசாகா திலகரத்ன இது தொடர்பில் தொடர்ந்து கூறுகையில், 'பெண்கள் மற்றும் சிறுவர்கள் மீதான பாலியல் வன்புணர்களைத் தடுப்பதற்கு அரசாங்கம், சட்டரீதியான நடவடிக்கைகளை விரைந்து முன்னெடுக்க வேண்டும்' என்றார். வித்தியாவின் வழக்கு விசாரணைகள் எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், கொழும்பில் மெழுகுவர்த்திகளை ஏற்றி, வித்தியாவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வொன்றை ஏற்பாடு செய்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.


0 Comments