(க.கிஷாந்தன்)
நுவரெலியா, கந்தப்பளை கொங்கோடியா மேற்பிரிவு தோட்டத்தில் 12 வீடுகள் கட்டி தருவதாக வாக்குறுதி வழங்கப்பட்ட போதும் 10 வீடுகளே மாத்திரமே கட்டப்படுவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
நுவரெலியா, கந்தப்பளை கொங்கோடியா மேற்பிரிவு தோட்டத்தில் மண்சரிவு அபாயம் காணப்பட்டதால் அப்பகுதியில் இருந்த 12 குடும்பங்களுக்கு பாதுகாப்பான இடத்தில் வீடுகளை கட்டித் தருவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலைய அதிகாரிகளால் கடந்த 18.03.2015 அன்று தோட்ட நிர்வாகத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து தோட்ட நிர்வாகமும் பீ.எச்.டி.டி நிறுவனமும் இணைந்து தோட்ட உட்கட்டமைப்பு
அமைச்சுடன் கலந்துரையாடி பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வீடு கட்டி தருவதாக கூறப்பட்டது.
இதன் அடிப்படையில் 12 வீடுகள் கட்டுவதற்கான இடத்தினை தோட்ட நிர்வாகம் ஒதுக்கியது.
வீடுகள் கட்டுவதற்காக அடிக்கல் கடந்த 2.05.2015 அன்று நாட்டப்பட்டது. இதன் போது பல அரசியல்
வாதிகள் கலந்கொண்டு வாக்குறுதிகள் பலவும் அளித்தனர்.
இந்நிலையில் 8.05.2015 அன்று 12 வீடுகளும் கட்டுவதாக கூறி நிலத்தை அளவெடுத்த பின் 19.05.2015 அன்று 10 குடும்ப அங்கத்தவர்களை மாத்திரம் அழைத்து வீட்டு இலக்கங்களை குழுக்கள் முறையில்
வழங்கி 20.05.2015 அன்று மீண்டும் நிலத்தினை 10 குடும்ப அங்கத்தவர்களுக்கு மாத்திரம்
வழங்கியுள்ளார்கள்.
தற்போது இரண்டு குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு வீடு கட்டுவதற்கான இடமும் அதற்கான
நடவடிக்கைகளும் எடுப்பதுக்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.
12 வீடுகள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டியதோடு அதற்கான ஆவணங்களும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.
வீடுகள் கட்டுவதற்கான ஆரம்ப வேளைகள் முன்னெடுக்கப்படுகின்றது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட இரண்டு குடும்பங்கள் தங்களுக்கும் வீடுகள் கட்டி தருமாறு இவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கின்றனர்.


0 Comments