வில்பத்து விவகாரத்தை மனிதாபிமானத்துடன் அணுகவேண்டும். இடம்பெயர்ந்திருந்த மக்கள் அங்கு மீள் குடியேறுவதிலேயே பிரச்சினை ஏற்பட்டது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு காணிகள் வழங்கி அவர்களை மீள்குடியேற்ற வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ஊடக முக்கியஸ்தர்களுடனான சந்திப்பு ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது.
இதன்போது எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளித்த அவர், அந்தப் பிரதேசங்களில் மீள்குடியேறுவோர் காடழித்திருக்கிறார்கள், மரங்களை வெட்டியிருக்கிறார்கள், இவைகளை நான் தடுத்து நிறுத்தியுள்ளேன். மீள்குடியேற்றம் தொடர்பான செயலணியொன்று முன்னாள் அமைச்சர் பசிலின் கீழ் செயற்பட்டுள்ளது. சுற்றாடல் தொடர்பான பிரச்சினைகளை இந்தச் செயலணியே கவனித்து வந்தது.
என்றாலும், மீள்குடியேறுவோரின் பிரச்சினை மிகவும் மனிதாபிமானத்துடன் கூடியது.
அவர்களுக்கு வேறு இடங்களில் காணி கொடுத்தேயாகவேண்டும். இது அவர்களது அடிப்படை உரிமையுடன் சேர்ந்த மனிதாபிமானப் பிரச்சினை. காடுகளை அழிப்பது தவறு.
ஒரு குறிப்பிட்ட தொகையினர் யுத்தத்தில் இடம்பெயர்ந்து சென்றிருக்கிறார்கள். அவர்களின் சந்ததி மூன்று மடங்காகி வந்திருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் காணி வழங்கி மனிதாபிமானத்துடன் நடவடிக்கை எடுக்கப்படவேண்டி இருக்கிறது என ஜனாதிபதி கூறினார்.


0 Comments