Subscribe Us

header ads

சமூகமொன்று பாதிக்கப்படுகின்ற போது அது தொடர்பில் வடமாகாண சபை மௌனித்து இருப்பது ஏன்?

-    அன்பன் -


வடக்கு முஸ்லிம்களுக்கு பிரச்சினைகள் ஏற்படுகின்ற போது இது தொடர்பில் வடமாகாண முதலமைச்சர் எவ்வித கவனமும் செலுத்தாது இருப்பது தொடர்பில் எமது அதிருப்பதியினை தாம் தெரிவிப்பதாக தெரிவித்துள்ள வடமாகாண சபையின் உறுப்பினர் றிப்கான் பதியுதீன் சிறுபான்மை சமூகமொன்று பாதிக்கப்படுகின்ற போது அது தொடர்பில் வடமாகாண சபை மௌனித்து இருப்பது கவலைத்தருவதாகவும் தெரிவித்தார்.

நேற்று வடமாகாண சபையின் அமர்வு யாழ்ப்பாணத்தில் இடம் பெற்ற போது வில்பத்து தொடர்பில் விசேட உரையொன்றினை ஆற்றும் போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.

நேற்றைய அமர்வு தொடர்பாக வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் -

வடக்கில் வாழ்ந்த முஸ்லிம்கள் 1990 ஆம் ஆண்டு பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர்.இதன் பின்னர் இவர்கள் முகாம் வாழ்க்கையினை அனுபவித்து வந்தனர்.அதன் பின்னர் ஏற்பட்ட சமாதான சூழ் நிலையில் மக்கள் தமது மண்ணுக்கு திரும்பினர்.

இவர்கள் தாம் வாழ்ந்த முசலி பிரதேச செயலகப் பிரிவில் மறிச்சுக்கட்டி,பாலக்குளி,கரடிக்குளி கிராமங்களில் மீள்குடியேறவந்த போது அவர்களுக்கு எதிராக பெரும்பான்மை இனவாத சக்திகள் இன்று கடும் போக்காக இந்த மக்களின் விடயத்தில் நடந்து கொள்கின்றது.

வுட மாகாண முதலமைச்சர் அவர்கள் வடக்கில் ஏற்பட்டுள்ள இந்த நிலையினை தெளிவுபடுத்த வேண்டிய தேவை இருக்கின்றது.ஜனாதிபதி,பிரதமர்,காணி அமைச்சர் ஆகியோருக்கு இதன் உண்மைத்தன்மையினை தெளிவுபடுத்தி தேவையான பாதுகாப்பினை பெற்றுத்தரவேண்டும் என்பது எனது கோறிக்கையாகும்.

மன்னார் மாவட்டத்தில் முசலியில் உள்ள முஸ்லிம்கள் தமது கிராமங்களில் அச்சமற்ற நிலையில் வாழ்வதற்கு வசதிகளை செய்து கொடுங்கள் என கேட்டதாகவும்,சுமார் 500 வருடம் பழமை வாய்ந்த இந்த காணிகளை வில்பத்து காணணியொன்று கூறி மக்களை மீண்டும் துன்புறுத்தும் செயல்களை இந்த வடமாகாண சபை தட்டிக் கேட்க வேண்டும் என்றும் மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் வலியுறுத்தியதாக மற்றுமொரு மாகாண சபை உறுப்பினரான ஜனூபர் கூறினார். 

-Irshad Rahumadullah-

Post a Comment

0 Comments