Subscribe Us

header ads

அம்பாறை மாவட்டத்தில் அன்வர் முஸ்தபா! ஆட்டம் காணுகின்றது அரசியல் களம்...

-umar lebbe Huthaumar-


அம்பாறை மாவட்டத்தில் அன்வர் முஸ்தபா! ஆட்டம் காணுகின்றது அரசியல் களம் உலகம், மாற்றத்தை நோக்கி செல்கின்றது இந்த வகையில் இலங்கையிலும் அரசியல், பொருளாதார சமூக மாற்றங்களை; வேண்டி நிற்கின்றது. 

அண்மையில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் இலங்கை மக்கள் மாற்றத்தை வேண்டி நின்றனர் இதன் பயனாக அதி மேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார். 

அத்துடன் இலங்கை புது முகங்களை அரசியலில் வரவேற்பதனையும் ஊழலற்ற அரசியல்வாதிகளை உருவாக்க மக்கள் முனைவதனையும் அண்மைக்கால தேர்தல்கள் சாட்சியம் கூறுகின்றது.

இந்த அடிப்படையில் அம்பாறை மாவட்டத்தில் எமது அமைப்பானது பல பக்கங்களை பார்த்து சமூகத்துக்கு மிகவும் பொருத்தமான முகங்களை அறிமுகம் செய்து எதிர்காலத்தில் தூய அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்துவதற்கு எமது அமைப்பானது தீர்மானித்துள்ளது எமது அம்பாறை மாவட்டம் முஸ்லிம்கள் செறிந்து வாழும் ஒரு பிரதேசம் அதேவேளை இங்கு பல்லின சமூகங்களின் நெருக்கீடுகளையும் தாங்கி வாழும் ஒரு பிரதேசம் இங்கு துவேசத்தை கக்குகின்ற பிற சமூக அரசியல் கலாச்சாரம் காணப்படுகின்றது மற்றும் எம் சமூகத்தை நெருக்கீடு செய்வதற்கு எதிர்கால அரசியல் பலம் வாய்ந்தததாக இருக்க வேண்டும் என்பது யாவரும் அறிந்த உண்மை எமது அம்பாறை மாவட்டத்தில் எமக்கு நன்கு அறிமுகமாகிய மேற்குறிப்பிட்ட அரசியல் பிரதானியை அறிமுகத்தை உங்களுக்கு தெரிவிப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகின்றோம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் சர்வதேச விவகார பணிப்பாளரும், அக்கட்சியின் கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளரும் சிம்ஸ் கெம்பஸின் பணிப்பாளர் நாயகமுமாகிய அன்வர் முஸ்தபா அவர்களை இச்சமூகம் தற்போது வேண்டி நின்கின்றது. 

இவர் ஆரம்ப கல்வியை சாய்ந்தமருது மஸ்ஹருஸ் ஷம்ஸ் வித்தியாலத்திலும் உயர்கல்வியை கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையிலும் நிறைவு செய்த இவர் பாகிஸ்தான் ஹம்டாட் பல்கலைகலத்தில் கணணித்துறையில் முதுமாணியை பட்டத்தை பெற்றவர் பண்டநாயக்கா சர்வதேச இராஜதந்திர பயிற்சி நிறுவனத்தில் இராஜந்திர உத்தியோகசார் டிப்ளோமா பாடநெறியை நிறைவு செய்தவர். அத்துடன் பல வருடகாலமாக ஜக்கிய அமெரிக்கா சர்வதேச அபிவிருத்தி முகவர் நிறுவனத்தில் நிகழ்ச்சி திட்ட முகாமையாளராக இணைந்து எமது சமூகத்துக்கு தேவையான பல அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்தவர். 

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பேரவையின் உறுப்பினராகவும் கணக்காய்வு முகாமைத்துவத்துவ குழுவின் தலைவராகவும் செயற்பட்டு சிறந்ததோர் நிருவாகம் ஏற்பட முயற்சித்தமையை பல்கலைக்கழகம் சமூகம் இன்றும் நினைவு கூறுகின்றது அத்தோடு இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் விசேட ஆலோசகராகவும் கடமையாற்றிவர் இவர் மஹிந்த ராஜபக்ச என்ற கொடுங்கோல ஆட்சியில் எமது பள்ளிவாயல் உடைக்கப்பட்ட போது பல அரசியல் தலைமைகளும் கட்சிகளும் வாய் மூடி செத்து கிடந்தன. 

அச்சந்தர்ப்பத்தில் தனக்கு மஹிந்த அரசாங்கத்தால் கிடைத்த பல பதவிகளை தூக்கி வீசிவிட்டு ஊடகங்களுடாக எமது சமூகத்துக்காக குரல் கொடுத்ததோடு தனக்கிருந்த சர்வதேச உறவைப்பயன்படுத்தி எமது சமுகத்தின் பிரச்சினையை சர்வதேசமயப்படுத்திய முதல் மனிதர். மற்றும் எமது சமூகத்துக்காக பல ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டு கருத்துகளை வெளியிட்டவர். 

அத்துடன் எமது சமூகத்தை உயர்கல்வியின் பால் வழிகாட்டி பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் இன்று வெளிநாட்டிலும் உள்நாட்டிலும் தொழில்வாய்ப்பை பெற்று மிகவும் சிறந்த வாழ்க்கை வாழ்வதற்கு வழிவகுத்தவர். அத்துடன் மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கி ஏழை சிறார்களும் தனது கல்வியை தொடர வழிவகுத்த பெருமை இவரை சாரும். பல அரசியல் தலைமைகளுடன் பழகிய மூத்த அனுபவசாலி. மக்களுடன் பழகுவதற்கு இனிமையாவர். எச்சந்தர்ப்பத்திலும் எமது சமூகத்தை விட்டுக்கொடுக்காத மனிதர். எமது சமூகத்துக்கு முகவரியை எழுதிய மறைந்த மாமனிதர் அஷ் ஷஹீத் எம்.எச்.எம் அஸ்ரப் அவர்கள் அரசியல் ரீதியான அபிலாசைகளை எமது சமூகத்துக்கு பெற்றுக்கொடுத்தார்.

தற்போது எமது சமூகம் அரசியல் ரீதியாக அநாதரவாக்கப்பட்டு இருக்கின்றது. வெறுமனே தேர்தல் காலங்களில் பொட்டனி வியாபாரியை போல வந்து தனது கட்சிக்கு வாக்கு வங்கியை நிரப்பி விட்டு சமூகத்தை அடகு வைக்கும் ஒரு நிலை காணப்படுகின்றது இது படித்தவர்கள் மெனியாக இருப்பதால் தான் இந்நிலை ஏற்படுகின்றது. எனவே இவரைப்போல படித்தவர்கள் எமது அபிலாசைகளையும் உரிமைகளையும் வெற்றெடுப்பார் என்பதில் எவ்வித சந்தேகம் இல்லை. இவர் பிரதமவேற்பாளராக களமிறங்குவதற்கான கூடுதலான கதைகள் உள்ளது. இவர் அரசியல் களத்தில் பலவிதமான செயற்றிட்;டங்களை தற்போது செய்து வருவதனை பார்த்து இவருடைய விவேகம் வேகம் என்பவற்றை எமது சமூகம் தற்போது பாராட்டும் நிலை காணப்படுகின்றது. இன்ஷா அல்லாஹ் எமது மறைந்த மாமனிதர் அஷ் ஷஹீத் அஸ்ரப் அவர்கள் விட்டுச்சென்ற பாதையை இவர் தொடர்வார் எமது சமூகம் விடியலை நோக்கி நகரும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை

Post a Comment

0 Comments